- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

மெலானி டேவிட் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து காலம் அவரை விடுதலை செய்யும்
சட்டத்தரணி திருமதி மெலானி டேவிட் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து காலம் அவரை விடுதலை செய்யும்.
“திட்டமிட்டுப் பரப்பப்படும் குற்றச்சாட்டு”
கனடா மண்ணில் இருந்து தமிழ் மக்களுக்கு சட்டத்தேவைகளை நிறைவேற்றி வரும் ஒரு பிரபலமான நிறுவனமாக இயங்கும் மெலானி டேவிட் நிறுவனத்தின் மீது ஒரு நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது .
இந்த குற்றச்சாட்டை எழுதிய பத்திரிகையும், இந்த குற்றச்சாட்டுக்கான எந்த ஆதாரங்களும் மெலனி டேவிட் எதிராக நீதிமன்றத்தில் இன்று வரை நிரூபிக்க படவில்லை என்றும் கூறுகிறது. இந்த நிலையில் இந்தப் பத்திரிகை எக்காரனத்துகாக இந்த செய்தியை வெளியிட்டது என்ற கேள்வி எழுகின்றது.
இக் குற்றச்சாட்டு சரியோ பிழையோ என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க நீதிமன்றம் இருக்கிறது.அவர்கள் தங்கள் கடமையை செய்து கொண்டிருக்கிரார்கள்.இது சம்பந்தமாக பலர் சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான பதிவுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .பல போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில் தனது தனித்துவத்தாலும் கடும் உழைப்பாலும் பலவருடமாக தமிழர்களுக்கு மட்டுமின்றி பல்லின சமூகத்தவர்களுக்கும் சேவையாற்றி சிறந்த குடிவரவாளர்களுக்கான விருதை வென்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்த திருவாட்டி மெலானி டேவிட் வெறுமனவே ஒரு பெரும் சட்ட நிறுவனத்தை தலைமை தாங்குவது மட்டுமல்ல ஆதரவு தேடும் பலபேர்களுக்கு தனது நிறுவனத்தின் மூலமாக பல்வேறுபட்ட சமூகப் பணிகளையும் ,உதவிகளையும் செய்து வருகிறார் .
இப்படிப்பட்ட தனது தாராள சிந்தையாலும் சிறந்த சேவையாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நம்மவர் மெலனி டேவிற் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து காலம் அவரை விடுதலை செய்யும். அது எவ்வாறு எனில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் எனும் கீதையில் சொன்னது போல்.
கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன்-