- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை
- உலகம் செய்தி பிலிப் இறுதி ஊர்வலத்தில் ஹாரி; வியப்பில் பிரிட்டன் மக்கள்
- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?

மெலானியா ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மெலானியா ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் தரப்பில், “அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் மேரிலான்ட்டில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிறுநீரஅறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமாக உள்ளார். சிகிச்சை முடிந்து ஒருவாரம் அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மெலானியாவை இன்று மருத்துவமனையில் பார்வையிட உள்ளார். சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார் என்று வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்படுள்ளது.
48 வயதான மெலானியா ட்ரம்ப் சுலேனேவியா நாட்டைச் சேர்ந்தவர். மெலானியா- ட்ரம்புக்கு பரோன் என்ற 12 வயது மகன் உள்ளார்.