- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

முல்லைத்தீவு மாந்தைப் பகுதியில் 60 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்ப்பட்ட மூன்று முறிப்பு பகுதியில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் உபயோகிகப்பட்டு வந்த மக்களின் 59.8 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆவது சிங்க படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் இந்திக்க விக்கிரமசிங்க, இந்த காணிகளுக்கான பத்திரங்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனிடம் நேரில் கையளித்துள்ளார்.
இந்த காணி ஆவணங்களை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்து அவர்கள் ஊடாக உரிய முறையில் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தக் காணிகள் கையளிப்பு தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டுள்ள முல்லைத்தீவில் உள்ள சமூக ஆர்வலர்கள் பலர் 300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட இந்த இராணு முகாம் அமைந்திருக்கும் இடத்தில் சுமார் 200 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு உரித்தானவை என்றும் அதற்காக நாம் மேலும் போராட வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.