- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை
- உலகம் செய்தி பிலிப் இறுதி ஊர்வலத்தில் ஹாரி; வியப்பில் பிரிட்டன் மக்கள்
- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?

முல்லைத்தீவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்கு சென்ற மக்களை “ யுத்த காலசோதனை” நடத்திய இராணுவம்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்கு சென்ற மக்களை யுத்த காலத் தில் இராணுவ சோதனைக்கு உட்படுத்தியது போன்று தமி ழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய பொலி ஸார் சோதனைக்கு உட்படுத்தி யது தொடர்பில் மக்கள் கடும் விசனத்தை தெரிவித்துள்ள னர். எங்கள் பிள்ளைகள் யாருக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போராடி உயிர் துறந்தார்களோ அவர்களை கொண்டே எம்மவர்களால் தம்மை சோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் வேதனை தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கள் யாருக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போராடி மக்கள் உயிர் துறந்தார்களோ, அவர்களை கொண்டே எம்மவர்களால் தம்மை சோத னைக்கு உட்படுத்துவது தொடர்பில் வேதனை தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச த்தில் செவ்வாயன்று தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்த பிரசார கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டத்திற்கு வருகை தந்த பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனை வரையும் பொலிஸார் தீவிர பரிசோதனை யின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனு மதித்தனர்.
இந்த கூட்டம் ஆரம்பமாவதற்கு முன் னரே அங்கு பொலிஸார் பெருமளவில் குவிக்க ப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கூட்டத்திற்கு வருகை தந்த மக்கள் அனைவரும் உடல் முழுவதும் பரிசோதனைக்கு உட்படு த்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இது தவிர செய்தி சேகரிப்புக்கு சென்ற ஊட கவியலாளர்களும் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். எமது பிள்ளைகள் போராடி, இவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவிட இவர்கள் எங்கள் பிள்ளைகளை சுட்டும் கடத்தியும் கொன்றவர்களை வைத்து எம்மை சோதனை செய்கின்றனர் என கூட்டத்திற்கு சென்ற தாய்மாரும் தந்தை மாரும் வேதனை தெரிவித்துள்ளனர். இனி இவ் வாறான கூட்டத்திற்கு தாம் செல்ல போவ தில்லை எனவும் விரக்தியுடன் தெரிவித்துள்ளனர்.