- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

முப்பை தீ விபத்து: நான் பாதுகாப்பாக உள்ளேன், தீயணைப்பு வீரர்களுக்காக பிரார்த்திப்போம் – தீபிகா படுகோனே
மராட்டிய மாநிலம் மும்பையின் ஓர்லி பகுதியில் 33 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்தான் இந்தி நடிகை தீபிகா படுகோனே குடியிருக்கிறார்.
குடியிருப்பின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை வீரர்கள் 10 வாகனங்கள், சிறப்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் பிடித்துள்ள தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகிறது.
குடியிருப்பு கட்டடத்தில் இருந்து 90 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர், தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தீபிகா படுகோனே டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “நான் பாதுகாப்பாக உள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி, தங்களுடைய உயிரை பணயம் வைத்து போராடிவரும் தீயணைப்பு படை வீரர்களுக்காக பிரார்த்திப்போம்,” என குறிப்பிட்டுள்ளார்.