முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஒரு தடவை மரணித்தார்

வெள்ளித்திரைகளில் மயிலாகஆடியும் குயிலாகப் பாடியும் திரைரசிகர்களையும் முன்னணிக் கதாநாயகர்களையும் குதூகலப்படுத்தியவர். மிகக்குறுகியகாலத்தில் எம்ஜிஆர் என்னும் ஆளுமையின் கவனத்திற்குஉள்ளாகிஅவரோடு இணைந்துதிரையிலும் அரசியல் உலகிலும் உழைத்துஎம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர் ஸ்தாபித்தஅண்ணாதிமுகவிற்குஉறுதியைகொடுத்தவர். பல் மொழிஆற்றலும் பக்குவமானபேச்சுக்களும் உயர்வைதந்துநின்றனஅவருக்கு.

ஆமாம்! அவரும் ஒருஆளுமைதான். அந்தகோபுரம் சரிந்து சில வாரங்களேஆகின்றன.
அவர்தான் முன்னாள் தமிழக முதல்வரும் அனைத்திந்திய அண்ணாதிராவிடமுன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் உலகத்தின் கண்கள் உற்று நோக்கிய ஒரு அதிசயம். கூடி நின்றமக்கள் வெள்ளம். அவர்கள் சிந்திய கண்ணீர், ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம். இந்தியாவின் மத்திய மாநிலஅரசுகள் தங்கள் பிரதிநிதிகளை அவரது இறுதிப் பயணத்திற்கு அனுப்பிவைத்து மரியாதை செய்த இராஜயோகம். இவையனைத்தும் சேர்ந்து எங்கள் இதயங்களை நனைத்த ஈரம் இன்னும் காயவில்லை.
அவர் வகித்த அந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஒரு பொருத்தமானவர் வருவார் என்று தமிழ்நாட்டுமக்கள் மாத்திரமல்ல, இந்திய தேசத்து பிரஜைகள் மாத்திரமல்ல, உ லகத்தமிழர்கள் அனைவருமே அந்தத் தெரிவு நிகழும் நாளுக்காக காத்திருந்தனர். எத்தனை முகங்கள் அவர்களின் மனக்கண்ணில் முன்பாக வந்து மறைந்தன. ஆமாம் அவை மறைக்கப்பட்டன.
பொறுப்பானஅந்தப் பதவியைவிட்டுக்கொடுத்தவர்கள் எத்தனையோபேர். அதற்குகாரணஙகள் பல இருக்கலாம். அச்சம் காரணமாக இருக்கலாம். அடக்கம் காரணமாக இருக்கலாம். ஆனால் ஒருவர் கூட  நான் அந்தப் பதவியை ஏற்று அதிமுகவை எனது மூச்சாக எண்ணி வாழ்வேன், பணியாற்றுவேன் என்று முன்வரிசைக்கு வரவில்லையே. எத்தனை கல்விச்சாலைகள் உயர் பல்கலைக் கழகங்கள, விஞ்ஞான வளர்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள் நிறைந்த தமிழ் நாட்டில் அந்தப் பதவிக்கு ஒருவர் கிட்டவில்லையே என்ற கவலை எம்மோடு சேர்ந்து பலரை வாட்டுகின்றது. அந்தக் துயர எண்ணங்களுக்கிடையில் இன்னும்மொரு செய்திவந்து சென்றது. “முன்னாள் தமிழகமுதல்வர் மீண்டும் ஓரு தடவைமரணித்தார்” என்று…