முன்னாள் போராளிகளுடன் இணைய மக்கள் அஞ்சுகின்றார்களள் என்கிறார் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்

சிறையில் இருக்கும் போது இராணுவத்தினர் வசம் ஆக்கப்பட்ட முன்னாள் போராளிகளுடன் இணைவதற்கு ஊர்மக்கள் அஞ்சுகிறார்கள் என தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர், அந்த நிலை தொடராமல் இருப்பதற்கு முன்னாள் போரா ளிகளுக்கான அனைத்து செயற்திட்டங்க ளையும் அரசும் நாமும் இணைந்து முன் னெடுக்க வேண்டும் எனவும் வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் சந்தித்து கல ந்துரையாடினார்கள். குறித்த சந்திப்பின் பின் னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் போராளிகள் பலர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் இராணுவத் தினர் அவர்களை தம்வசமாக்கினார்கள். அதாவது நாங்கள் உங்களை விடுவிக் கின்றோம், நீங்கள் எம்முடன் இணைந்து பணியாற்றுங்கள், தகவல்களை சேகரித்துத் தாருங்கள் என்ற முறையில் கேட்டுக்கொண் டதற்கிணங்க, முன்னாள் போராளிகளில் பலர் இராணுவத்தினருடன் சேர்ந்து வேலை செய்கின்றனர். இப்போதும் அப்படித்தான். அவர்களு டைய வாழ்கை நிலை உயர்ந்தது. ஆனால் அவர்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டு க்குள் இருப்பதை நான் வெளிநாட்டுப் பிரதி நிதிகளிடம் உணர்த்தினேன்.

மேலும் எமது சமுதாயத்திலே முன்னாள் போராளிகள் தொடர்பில் ஒரு விதமான கரி சனை இருப்பதை யும் சுட்டிக்காட்டி னேன். ஏனெனில் முன்னாள் போரா ளிகளுடன் நாங்கள் சேர்ந்து கொண் டால், அரசு என்ன நினைக்குமோ, ஏதா வது நடைபெறுமோ? என்ற அச்சம் மக் களிடையே உள்ளது. அதனால் எங்களு டைய முன்னாள் போராளிகளோடு சேர்ந்திருப்பதை ஊர் மக்கள் தவிர்ப் பதையும் வெளிநாட் டுப் பிரதிநிதிகளுக்கு எடுத்துக் காட்டினேன். அது அவ்வாறு இருக்கக் கூடாது. ஆனால் நாங்களும் அரசும் இணைந்து முன்னாள் போரா ளிகளுக்கான பல திட்டங்களை செய்து முடிக்கவேண்டும் என்பதையும் வலியு றுத்தினேன். அவ்வா றான செயற்றிட்டங் களை நாங்கள் ஆரா ய்ந்து செய்துகொண் டிருக்கின்றோம் என் பதையும் கூறினேன் என மேலும் தெரி வித்தார்.