முன்னாள் காதலியை ” விபசாரி ” என்று பேசிய சீமானின் தமிழ் பண்பாடு காற்றில் பறக்கிறது !!

‘மேடைகள் தோறும், என்னை விபச்சாரி என, சித்தரித்து பேசிவரும், சீமான் மற்றும் அவரது அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, நடிகை விஜயலட்சுமி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

‘தம்பி’ உள்ளிட்ட படங்களை, இயக்கியவர், சீமான். இவர், நாம் தமிழர் என்ற அமைப்பை துவங்கி, ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இவரும், ‘பூந்தோட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள, விஜயலட்சுமியும் காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சீமான், வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். இதனால், சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய விஜயலட்சுமி, காதலர் தினத்தன்று, இருவரும், ‘கேக்’ வெட்டிய படங்களையும் வெளியிட்டார்.

சமீபத்தில், சீமான், ‘ஏய் பொண்டாட்டி… நான் கெட்டவன் இல்லடி… கேடு கெட்டவன்டி’ என, பேசுவதுபோல, ‘வீடியோ’ வெளியானது. சீமான் பற்றி, சில கருத்துகள் அடங்கிய வீடியோவை, விஜயலட்சுமியும் வெளியிட்டார்; இதனால், அவருக்கு மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜயலட்சுமி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்துள்ள புகார்: சீமான் மற்றும் அவரது கட்சியினர், என்னை விபச்சாரி போல, மேடைகள்தோறும் பேசி வருகின்றனர்.இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். சீமான் மற்றும் அவரது கட்சியினர் மீது, சட்ட ரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும், சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை கமிஷனர், ஜெயலட்சுமியிடமும், அவர் புகார் அளித்துள்ளார்.