- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

முன்னாள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா ஜாமினில் விடுதலை
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் தீவிர ஆதரவாளரும், இலங்கை பெட்ரோலிய வனத்துறை முன்னாள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா நேற்று மாலை தனது அலுவலகத்துக்கு பாதுகாவலர்களுடன் சென்றார்.
அங்கு சில கோப்புகளை எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்த சில ஊழியர்கள் அர்ஜூனா ரணதுங்கவை சிறைப்பிடிக்க முயற்சித்தாக கூறப்படுகிறது.
அப்போது இரு தரப்பினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசம் அடைந்த அமைச்சரின் பாதுகாவலர்கள் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.
இதில் படுகாயமடைந்த ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஊழியர் ஒருவர் பலியானது தொடர்பாக பெட்ரோலிய துறை முன்னாள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்காவை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில். துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கா ரூ.5 லட்சம் ஜாமினில் கொழும்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.