- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

முத்தலாக்: மனைவியை எரித்த கணவன் கைது
முத்தலாக் கூறிய கணவன் மீது புகார் அளித்த மனைவியை குடும்பத்துடன் எரித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். உ.பி.,யில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உபி., யில் ஸ்ரவாஸ்தி மாவட்டம் காத்ரா கிராமத்தை சேர்ந்தவர் ரம்சான்கான் மகள் சையீதா 22. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நபீஷ் 26. என்பவரை திருமணம் செய்தார். தொடர்ந்து நபீஷ் மும்பைக்கு பணி நிமித்தமாக சென்றார். அங்கு இருந்தபடியே போனில் சையீதாவிடம் முத்தலாக் கூறி விவாகாரத்து செய்துள்ளார்.
இதனையடுத்து சையீதா போலீசாரிடம் புகார் மனு கொடுத்தார். போலீசார் வழக்கு பதியாமல் இரு குடும்பத்தினரிடமும் பேச்சு நடத்தி சுமூகமாக செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சையீதாவை கணவர் நபீஷ் அடித்து தாக்கி தரையில் விழ செய்தார். தொடர்ந்து தாத்தா, பாட்டி, அத்தை ஆகியோர் இணைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இதனை நேரில் பார்த்ததாக சையீதாவின் மகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.