முதல் முள்ளம் தண்டுள்ள பத்திரிகையென்ற பெயரை கனடா உதயன் தக்க வைத்துள்ளது

முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு, கனடாவில் தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்களின் விடையமாக பதிவு செய்திருக்கும் முதல் முள்ளம் தண்டுள்ள பத்திரிகையென்ற பெயரை கனடா உதயன் தக்க வைத்துள்ளது. ஆனாலும், இவ்வளவு காலமும் அமைதியாக இருந்ததன் பின்னனியையும் பதிவு செய்யவும்.

இப்படி எல்லா தமிழ் ஊடகங்களும் தெளிவாக உண்மைகளை வெளிக் கொண்டு வந்தால் மட்டும் தான் மக்களின் சொத்துக்களை பதுக்கியவர்களிடம் இருந்து ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கொடுக்க முடியும்.

 பல தடவைகள் இந்த விடயத்தை கனடாட உதயன் பதிவு செய்திருக்கின்றது. குறிப்பிப்பாக பத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய தலையங்கள். அவைகளில் பல எமது ஆசிரிய தலையங்களின் தொகுப்பாக வெளிவந்த “இதுவரை” என்னும் நூலில் அடங்கியுள்ளன. உதாரணமாக இந்த நிதி அபகரிப்பு தொடர்பான விடயங்களை திருமண வைபவங்களிலும் பிறந்த நாள் கொண்டாட்டங்;களில் மட்டும் பேசிவிட்டு கலைந்து செல்கின்ற காரியமாக இருக்காமல் நீங்கள் பணம் கொடுத்தவர்களிடம் போய் கேளுங்கள் எங்கே எமது பணம் என்று” என்று எழுதியிருந்தது எமது கனடா உதயன். ஆனால் இது ஒரு கரடு முரடாக பாதை என்பது எமக்குத் தெரியும். உதாரணமாக இங்கு திடீர் என்று பாரிய முதலீட்டை மூலதமாக்கி (??????) பெரியளவில் விஸ்த்தரிக்கப்பட்ட புடவை மாளிகை ஒன்று (இந்த நிதி எங்கேயிருந்து கிட்டியது) தற்போது புதிய முயற்சி (முதலீடு) ஒன்றில் இறங்கியுள்ளது என்ற செய்தி வெளிவநதுள்ளத அது தென்னிந்தியாவில் உள்ள புகழ்பெறற சைவ உணவகம் ஒன்றின் FRANCHAISE ஐப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கி தற்போது உணவகம் விரைவில் திறக்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுளளதாக தகவல். இந்த முதலீட்டுக்கு எத்தனை மில்லியன டாலர்கள தேவை? இவற்றையெல்லாம் கனடா உதயன் மட்டும் தட்டிக்கேட்டால் எமக்கு எதிராக நூற்றுககணக்கானவர்கள திரண்டு எழுவார்கள் .

அவர்கள் எல்லோருமே பல சொத்துக்களையும் பல கோடி டாலர்களையும் துவசம் செய்தவர்கள் ஆவார்கள். எனவே கனடா உதயன் மிகவும் அவதானமாக இந்த சத்திய யுத்தத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. எத்தனை பேர் எமக்குப் பக்கத்தில் வந்து நிற்பார்கள். நிச்சயம் ஒருவருமே வரமாட்டார்கள். முனனரைப் போல நாம் பல அடவாடித்தனங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் அலுவலகம் உடைத்தல் பத்திரிகைகளை கடைகளிலிருந்து தூக்குவது (பொய்க்காராணங்களைச் சொல்லி) விளம்பரங்கள் நிறுத்துங்கள் (தேசத் துரோகி என்று சொல்லி) இவ்வாறான விடயங்களுக்காக நாம் மிகுந்த அவதானமாகவே இந்த விடயங்த்தில் இறங்க வேண்டியுள்ளது. காவல்துறையோடு முன்னெச்செரிக்கையாக தொடர்:பு கொண்டுள்ளோம். எமக்கு எதிரான அடவாடித்தனங்கள் இடம்பெறும் போது அவற்றில் யார் யார் சம்பந்தப் படுவார்கள என்ற பெயர்களை சமர்ப்பிக்க வேண்டி வரும். எனவே வெறுமனே எமக்கு ஆதரவு தருவது போல எழுதிவிட்டுப் போகாமல் நீஙகளும் சம்பந்தப்பட்டவர்களை நாடிச் சென்று நியாயம் கேளுங்கள். இது இதுவரை … பின்னர் தொடர்வோம்

COMMENTS

Comments are closed.