முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார், விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் – பிரதாப் ரெட்டி

சென்னை,
முதல் – அமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார், அவர் விரும்பும்போது வீட்டிற்கு செல்லாம் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறி உள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ந் தேதி முதல் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சையில் உள்ள அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் குழுவும், லண்டன் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த டாக்டர் குழுவினரும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிறப்பான சிகிச்சை காரணமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார். அவர் செயற்கை சுவாசம் இன்றி இயற்கையாக சுவாசிக்கிறார். தொற்று மீண்டும் ஏற்படாமல் தடுக்கவே அவசரசிகிச்சை பிரிவில் முதல்வர் உள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரும்பும்போது வீட்டிற்கு செல்லலாம், என்று கூறினார்.