- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

முதல்வருடன் 4 மூத்த அமைச்சர்கள்: தமிழக அரசை வழிநடத்தும் 5 பேர் குழு
தமிழக அரசின் அனைத்து முடிவுகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டை யன் உள்ளிட்ட 4 அமைச்சர் களும் இணைந்து எடுத்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கிய தைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். கடந்த 18-ம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் அவர் தனது அரசின் பெரும் பான்மையை நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி தலைமைச் செயலகம் வந்த அவர், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய அறையில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது 500 மதுக்கடைகள் மூடல், இரு சக்கர வாகனம் வாங்க பெண்களுக்கு ரூ. 20 ஆயிரம், மீனவர்களுக்கு 5 ஆயிரம் வீடுகள், வேலையில்லாத இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை இரு மடங்காக உயர்வு, மகப்பேறு உதவித் தொகை ரூ. 18 ஆயிரமாக உயர்வு ஆகிய 5 முக்கியத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
எங்கும் எதிலும் ஐவர் குழு
அன்றைய தினமே இந்த 5 திட்டங் களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக தலைமைச் செயலகத் தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனி வாசன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன், மின்துறை அமைச்சர் பி.தங்க மணி, உள்ளாட்சித் துறை அமைச் சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர். எடப்பாடி பழனிசாமி முறைப்படி தனது பணிகளைத் தொடங்கியபோது மற்ற அமைச் சர்கள் இருந்தாலும் இந்த 4 அமைச் சர்களும் முதல்வரை நெருக்கமாக சூழ்ந்திருந்தனர்.
நேற்று முன்தினம் தலைமைச் செயலகம் வந்த முதல்வர், வறட்சி யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரத்து 247 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கான ஆலோசனைக் கூட்டத்திலும் திண்டுக்கல் சீனிவாசன், செங் கோட்டையன், தங்கமணி, வேலு மணி ஆகியோர் பங்கேற்றனர்.
அதுபோல நேற்று 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க ஐவர் குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலும் முதல்வருடன் இந்த 4 அமைச்சர்களும் பங்கேற்றனர். எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் முதல்வர் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் அடங்கிய ஐவர் குழுவால் எடுக்கப்பட்டுள்ளன.
ஓபிஎஸ்ஸின் செயல்பாடு
கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் சுதந்திரமாக செயல்பட்டார். வார்தா புயல் நிவாரணப்பணிகளின்போது சென்னை மாநகராட்சி அலுவலகம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஓபிஎஸ் நேரடியாக சென்று அதிகாரிகளு டன் ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணா நதிநீரை பெறுவதற் காக ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்தது, ஜல்லிக்கட்டு பிரச் சினைக்காக பிரதமர் மோடியை சந்தித்தது என ஓபிஎஸ் சுதந்திர மாக செயல்பட்டு முடிவுகளை எடுத் தார். சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களை உடன் வைத்துக் கொண்டார். இதனால்தான் அவர் சசிகலா தரப்பின் கோபத்துக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா வழியில்..
4 மூத்த அமைச்சர்களுடன் ஆலோசித்த பிறகே எடப்பாடி பழனி சாமி எந்தவொரு முடிவையும் எடுக்கிறார். அதிமுக பொதுச்செய லாளர் சசிகலா பெங்களூரு சிறை யில் அடைக்கப்பட்டுள்ள நிலை யில் துணைப் பொதுச்செயலாள ராக டிடிவி தினகரன் நியமிக்கப் பட்டுள்ளார். அவரின் ஆலோ சனைப்படியே முதல்வர், 4 அமைச் சர்கள் கொண்ட ஐவர் குழு தமிழக அரசை வழிநடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் போல கலகம் செய்து விடக்கூடாது என் பதற்காக கூட்டுத் தலைமையை சசிகலா ஏற்படுத்தியிருப்ப தாக அதிமுகவினர் தெரிவிக் கின்றனர்.
கடந்த 2011 – 2016-ல் ஜெய லலிதா முதல்வராக இருந்தபோது இதேபோல அமைச்சர்கள் குழுவை வைத்துக்கொண்டே ஆட்சியை நடத்தினார். ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் தொடக்கத்தில் இந்தக் குழுவில் இருந்தனர்.
செங்கோட்டையன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் அந்த இடத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் பிடித்தார். 2016 தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும் ஓ.பன்னீர்செல் வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப் பாடி பழனிசாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அமைச்சர்கள் குழுவில் இடம்பெற் றனர். ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றி தற்போதும் முதல்வர், 4 அமைச்சர்கள் கொண்ட குழு தமிழக அரசை வழிநடத்து வருவது குறிப்பிடத்தக்கது.