முதல்வருக்கு சிகிச்சை அளிக்க 4-வது முறையாக சென்னை வந்தார் லண்டன் மருத்துவர்

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே 4-வது முறையாக சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தார். கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் அப் போலோவுக்கு வந்து முதல்வரின் உடல்நிலை பற்றி விசாரித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22-ம் தேதி அப் போலோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனை மருத்துவர்கள் அப்போலோ மருத்துவக் குழுவினருடன் இணைந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் லண்டன்,எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோ சனைப்படி சிங்கப்பூர் மவுன்ட் எலிச பெத் மருத்துவமனையில் இருந்து 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் சென்னை வந்து முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை கொடுத் தனர்.

முதல்வருக்கு அளிக்க வேண் டிய சிகிச்சைகள் குறித்து ஆலோ சனை கூறிவிட்டு,அவர்கள் அனை வரும் 3 நாட்களுக்கு முன்பு புறப்பட்டுச் சென்றனர். அவர்களது ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச் சைப் பிரிவு குழுவினர்,மூத்த இதய சிகிச்சை நிபுணர்கள்,மூத்த சுவாச சிகிச்சை நிபுணர்கள்,தொற்று நோய் சிகிச்சை நிபுணர்கள்,நாள மில்லா சுரப்பி மற்றும் சர்க்கரை நோய் நிபுணர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஊட்டச்சத்து உணவுகள் வழங்கு வது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர்களும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில்,நேற்று 4-வது முறையாக சென்னை வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே,முதல் வரின் உடல்நிலையை பரிசோதித்து,அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தார். அதேபோல எய்ம்ஸ் மருத்துவர்களும்,சிங்கப்பூர் பிசியோதெரபி மருத்துவர்களும் மீண்டும் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.

இதற்கிடையே,முதல்வரின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி,அப்போலோ மருத்துவமனைக்கு நேற்று வந்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும் போது,‘‘அமைச்சர்கள்,மருத்துவர் களை சந்தித்து முதல்வரின் உடல்நிலை பற்றி கேட்டேன். முதல்வர் குணமடைந்து வருவதாக தெரிவித்தனர். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்’’ என்றார்.