முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் சொத்து

யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பொது அமைப்புக்கள் பல சேர்ந்து கூட்டாக நாளை வெள்ளிக்கிழமை ஹர்த்தால் ஒன்றுக்கு ஏற்பாடு.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வலுவிலக்கச் செய்து, ஏனைய கட்சிகளை புறக்கணித்து, தமிழரசுக் கட்சியின் கைகளில் வடக்கு மாகாண சபையை ஆக்கிரமிக்க சம்பந்தன்,சுமந்திரன் கூட்டாகச் செய்யும் சதியும் முயற்சியும் தெனனிலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களின் “சாணககியம்” “வேலை” செய்யாத காரணத்தால் தமிழ் மக்களுக்கு விடிவே கிட்டவில்லை. ஆனால் வடக்கு மாகாண சபையைப் பொறுத்தளவில் அதனை தமிழரசுக் கட்சியின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர எண்ணும் சம்பந்தன் அவர்களின் சாணக்கியம் வெற்றி பெற முயற்சி.
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக மாண்புமிகு விக்னேஸ்வரன் அவர்களை தொடர்ந்து தக்கவைக்க அனைத்து தரப்பினரும் முயற்சி. அவர் பதவி பறிக்கப்பட்டால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக வடக்கிலிருந்து “பாயும்” எதிர்ப்புக் குரல் அற்றுப் போய் விடும்
வடக்கு மாகண சபைக்கு புதிய முதலமைச்சராக அவைத் தலைவர் சிவிகே சிவஞானத்தை கொண்டு வர முயலும் முயற்சியை வடக்கு மக்கள் முறியடிக்க வேண்டும்.
வடக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரனு;ககு தொடர்ச்சியாக இருக்கும் ஆதரவைக் கண்டு அஞ்சியே தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் யாழ்பபாணம் விரைந்து அவரோடு இரசசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்
என்ன நடந்தாலும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் சொத்து. அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சர். அவரை தக்க வைப்பதே தற்போது வடக்கு மாகாண மககளுக்கும் அங்குள்ள பொது அமைப்புகளுக்கும் உள்ள ஒரு பாரிய பொறுப்பு.