முகமறியா குழந்தைகளினதும் இளைஞர்களினதும் உயிர்காக்கும் முயற்சியில் வெற்றிகரமாக இயங்கும் கனடா வாழ் செந்தில் குமாரன்

இலங்கையில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் குடும்பஸ்த்தர்கள் ஆகியோரின் உயிர்காக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி கண்டுள்ள கனடா வாழ் செந்தில் குமரன் கனடா திரும்பியுள்ளார். தனது சொந்தப் பணம் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணம் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் ஆகியோரிடமி(ருந்து சேகரிக்கப்பட்ட நிதி ஆகியவற்றின் “பலத்தோடு” இலங்கை சென்று நேரடியாக இந்த இதய சத்திர சிகிச்சைகளை கண்டு வந்துள்ளார்.
அத்துடன் கொழும்பில் உள்ள டுயுNமுயு ர்ழுளுPஐவுயுடுளு வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள் மற்றும் வைத்தியப் பெருந்தகைகள் ஆகியோரையும் சந்தித்து நன்றி தெரிவித்து வந்துள்ளார்.இவ்வாறான சந்திப்புக்குரிய
காரணம் மேற்படிடுயுNமுயு ர்ழுளுPஐவுயுடுளு வைத்தியசாலை நிர்வாகம் மேற்படி வறிய நிலையில் உள்ளவர்களின் சந்திர சிகிச்சைக்காக நியம கட்டணத்திலிருந்து அரைவாசித் தொகையை யே கட்டணமாக பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இலங்கையில் பல சமூகப்பணிகள் உயிர்காக்கும் பணிகளில் தனி மனிதனாக நின்று செயற்படும் செந்தில் குமரன் அண்மையில் வன்னி மண்ணில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவச் செல்வங்களின் குடி நீர்ப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சுமாடர் ஐந்து இலட்சம் ரூபாய்கள் செலவில் குடி நீர்த்திட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மேற்படி குடிநீர்த் திட்டத்தைப் பெற்றுக்கொண்ட மேற்படி பாடசாலை அதிபர் திரு செந்தில் குமரனிடம் “எமது மாணவர்களின் வாழ்வில் மேலும் ஓரு பத்து வருடங்களை உங்கள் தாரளமனது அதிகரித்துள்ளது” என்று பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்மை இங்கு குறிப்பிடத்தக்குத.
முகம் அறியாக் குழந்தைகளின்தும் மாணவச் செல்வங்களினதும் உயிர்காக்கும் பணியை தனது கையில் எடுத்திருக்கும் கனடா வாழ் செந்தில்குமாரன் என்றும் நலமுடன் வாழ அனைவரும் பிராத்திப்போமாக!