முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹான் தனது கணவருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹான் தனது கணவருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்தார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தகாத தொடர்பு உள்ளது. அவரும், அவருடைய குடும்பத்தினரும் என்னை கடந்த 2 ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வருகிறார்கள். என்னை கொலை செய்யக்கூட முயற்சி செய்தார்கள்’ என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி கொல்கத்தா போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

முகமது ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும் ஹசின் ஜஹான் கூறியது தொடர்பாக பிசிசிஐ ஊழல் எதிர்ப்பு பிரிவும் விசாரிக்கிறது. மோசமான செயலுக்காக துபாய் ஓட்டலில் முகமது ஷமி மற்றும் பாகிஸ்தானி பெண் அலிஸ்பாவும் சந்தித்தனர் எனவும் ஹசின் ஜஹன் கூறியிருந்தார். ஆனால் முகமது ஷமியும், அலிஸ்பாவும் அதனை மறுத்தனர், நாங்கள் நண்பர்கள் மட்டுமே என விளக்கம் கொடுத்தார்கள் ஹசின் ஜஹான் அலிஸ்பா . முகமது ஷமியை காப்பாற்ற முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்

தற்போது கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹான் தனது கணவருக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார்.

“முகம்மது ஷிமிக்கு பெண்களை அறிமுகப்படுத்தியது முகம்மது பாய் ஆவார். “ஷமிக்கு சட்டவிரோதமான உறவுகள் இருந்த மற்றொரு பெண் மன்சூ மிஸ்ரா என்றும் அவர் கூறி உள்ளார்.

இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நாளை ஜஹான் சந்திக்க உள்ளார்.