மீனவ மக்கள் நடத்திய போராட்டத்தில் ஒன்றில் பங்கெடுக்கச் சென்ற மாவை சேனாதிராஜா அந்த மக்களால் வெளியேற்றப்பட்டார்

மீனவ மக்கள் நடத்திய போராட்டம் ஒன்றில் பங்கெடுத்து அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறிச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அந்த மக்களால் வெளியேற்றப்பட்ட சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வெளிமாகாண மீனவர்களை உடனடியாக வெளியேற்ற கோரி கடந்த செவ்வாய்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் முன்னெ டுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல்வாதிகளை போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என கூறி வெளியேற்றி யுள்ளனர்.
அங்கு சென்றிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராசா மற்றும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் ஆகியோரை வெளியேற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீன வர்கள் குரல் எழுப்பியிருந்தனர். சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காலை 9 மணியளவில் போராட்டத்திற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று கொண்டிருந்த போது, மாவை சேனாதிராசா சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த மீனவ சமாசத்திற்குள் அமர்ந்து இருந்துள்ளார். இதே போன்று சுகிர்தனும் அலுவலகத்திற்குள் அமர்ந்திருந்துள்ளார்.
இதனை அறிந்த மீனவர்கள் அவர்கள் இருவரும் உடனடியாக வெளியேற வேண் டும் என அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இதனால் மாவை சேனாதிராசா உடனடியாகவே அங்கிருந்து தனது வாகனத்தின் மூலம் வெளியேறினார். தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் சுகிர்தனை அங்கிருந்து வெளியேறுமாறு கூச்சலிட்டனர்.எனினும் சுகிர்தன் வெளியே றாமல் அங்கே நின்றார்.

இதை தொடர்ந்து பேரணி ஆரம்பமாகிய போது பேரணிக்கு இறுதியாக சுகிர்தன் வந்து கொண்டிருந்தார். இதேபோன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உள் ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் பேரணியின் இறுதியிலேயே கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது அரசியல்வாதிகளுக்கு எதிராக குறிப்பாக கூட்டமைப்புக்கு எதிராக கோசங்களை முன்வைத்திருந்தனர். குறிப்பாக கூட்டமைப்பு சலுகைகளுக்காக விலை போய்விட்டு இங்கே வந்து போராடுவது எந்த வகையில் நியாயம்? அரசுக்கு ஆதரவு வழங்குபவர்கள் அரசோடு பேசி எங் கள் பிரச்சினையை தீர்க்காமல் இங்கு வந்து போராட்டத்தில் நிற்பது வெட்கமில்லையா? என கடுமையாக மீனவர்கள் விமர்சித்திருந்தனர் என்பது இங்;கு குறிப்பிடத்தக்கது.