- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற கலாசாரம் அரங்கேற இருக்கிறது என்கிறது “வலம்புரி”
அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் “வலம்புரி” தினசரி மேற்கண்டவாறு ஒரு செய்தியை பிரசுரித்துள்ளது. வழமையாக தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியல் தலைமைகளால் ஏற்படுத்தப்படும் அரசியல் சார்ந்த பின்னடைவுகள் போன்றவற்றை தகுந்த முறையில் சுட்டிக்காட்டு மேற்படி “வலம்புரி” பத்திரிகை இந்த செய்தியின் மூலம் சரியான ஒரு விடயத்தை எமது மக்களுக்கு சொல்ல முனைகின்றது என்ற எண்ணத்தோடு இங்கு மறுபிரசுரம் செய்கின்றோம்.- ஆசிரிய பீடம்.
மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற வழமையான கலாசாரம் அரங்கேற இருக்கிறது. ஆமாம்!புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களிடம் முன்வைக்கப்பட்ட நம்பிக்கைகள் உடைந்து விழுந்து தகர்ந்து போகின்ற காலம் நெருங்கிவிட்டது. அதற்கான அறிகுறிகள் பளிச்சிடுகின்றன.
அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எதிர்ப்பதென மகிந்தராஜபக் தரப்பு கங்கணம் கட்டி நிற்கின்றவேளையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் அவரைக் கடந்து ஒரு படி மேலாக செல்ல முற்படுவதும் போலத் தெரிகிறது.
அதாவது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பேரின வாத சிந்தனைக்கு பதிலடி கொடுக்க முற்பட்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் சிங்களத்தை அரச மொழியாக்குவதென அறிவித்தார்.ஆக, பண்டாரநாயக்கவின் அறிவிப்பு உன்னை விட நான் பேரினவாதி என நிரூபிப்பதாக இருந்தது. இந்தக் கலாசாரம் இன்னமும் சாகவில்லை என்பதை நிரூபிப்பதைப்போல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டாலும் அது தொடர்பில் ஆச்சரியப்படுதற்கில்லை.
ஆம், புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எதிர்ப்போம் என மகிந்த ராஜபக் தரப்பு பகிரங்கமாக கூறிவிட்டது. இந்நிலையில் நீங்கள் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எதிர்த்தால் அதனை அப்படியே கைவிடுவதுதான் ஒரே வழியயன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய தென்பது நீ எதிர்ப்பதற்காக மட்டுமல்ல என்னுடைய நினைப்பும் அதுதான். எனவே உன்னுடைய எதிர்ப்பை விட நான் முந்திக் கொண்டு புதிய அரசியலமைப்புக்கு முடிவு கட்டுவேன் என்பதாக நிலைமை இருக்கிறது.இத்தகையதோர் முடிவுதான் வரும் என்பதை தமிழ் மக்கள் தெட்டத்தெளிவாக உணர்ந்திருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதிமொழியும் அவர்கள் ரணில்விக்கிரம சிங்கவுக்கு வழங்கிய ஆதரவும் அரசியலமைப்புச் சீர்திருத்தம்
வெளியாகிவிடுமோ என்ற பிரமையை ஏற்படுத்தியிருந்ததும் உண்மைதான். எதுஎவ்வாறாயினும் வெறுங்கையோடு இலங்கைபுத்தான் என்பதைப்போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லாவற்றையும் இழந்து வெறுங்கையோடு தமிழ் மக்களை நோக்கி வருகிறது.
இங்குதான் தமிழ் மக்கள் தங்களை உசார்படுத்தவும் தங்களை வீரச் செறிவுள்ளவர்களாக்கவும் வேண்டிய தேவையுள்ளது.கேள்வி கேட்பதும் அவற்றுக்கு பதில் தருவதென்பதும் நெறிப்படுத்துவதற்கான ஒருவழிமுறையே அன்றி கேள்வி கேட்பது மட்டுமே உரிமையைப் பெற்றுத் தருவதாக ஒருபோதும் அமையாது.
ஆகையால் ஒரு புதிய வழியைத் தேடுகின்ற மக்களாக தமிழ் மக்கள் தங்களை மாற்ற வேண்டியவர்களாக உள்ளனர்.இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்ற எச்சரிக்கைகள் எங்களை ஆற்றுப்படுத்துமேயன்றி அது பெரும்பான்மை சார்ந்தவர்களையோ அன்றி ஆட்சி அதிகாரத்தையுடையவர்களையோ ஒருபோதும் அதட்டாது.அவர்களைப் பொறுத்தவரை நாங்கள் பலவீனப்பட்டுவிட்டோம். எமக்குப் பலமாக இருந்தவர்களை நாம் இழந்துவிட்டோம்.
எனவே அவர்கள் கூறியதை ஏற்றுவாழ்வது தான் எங்களின் வாழ்வாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர்.இங்குதான் தமிழர்கள் இராஜதந்திர ஆயுதத்தை ஏந்தியும் தமக்கு ஏற்பட்ட இழப்பு என்ற மறையை பலமாகவும் தொட்டு புதிய பாதையில் சர்வதேசத்தை நோக்கியதான நகர்வை ஆரம்பிக்க வேண்டும்.இதை விடுத்து தத்துவம் கூறுவதும் தர்ம உபதேசம் செய்வதும் பேரினவாதச் சிந்தனையை ஒருபோதும் திருத்தாது.
அவ்வாறு திருத்துவதாக இருந்தால் அது தந்தை செல்வநாயகத்தின் காலத்திலேயே காரியமாயிருக்கும்.எனவே நாங்கள் பலமாக இருக்கும்போது தான் அவர்கள் எங்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என சிந்திப்பார்கள்.அந்தச் சிந்தனை அமுலாகவேண்டுமெனின் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஒரு புதிய பாதையில் பயணிக்க வேண்டியது அவசியமாகும்.
மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற வழமையான கலாசாரம் அரங்கேற இருக்கிறது.புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களிடம் முன்வைக்கப்பட்ட நம்பிக்கைகள் உடைந்து விழுந்து தகர்ந்து போகின்ற காலம் நெருங்கிவிட்டது. அதற்கான அறிகுறிகள் பளிச்சிடுகின்றன.அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எதிர்ப்பதென மகிந்தராஜபக் தரப்பு கங்கணம் கட்டி நிற்கின்றவேளையில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் அவரைக் கடந்து ஒரு படி மேலாக செல்ல முற்படுவதும் போலத் தெரிகிறது.
அதாவது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பேரின வாத சிந்தனைக்கு பதிலடி கொடுக்க முற்பட்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் சிங்களத்தை அரச மொழியாக்குவதென அறிவித்தார்.ஆக, பண்டாரநாயக்கவின் அறிவிப்பு உன்னை விட நான் பேரினவாதி என நிரூபிப்பதாக இருந்தது. இந்தக் கலாசாரம் இன்னமும் சாகவில்லை என்பதை நிரூபிப்பதைப்போல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டாலும் அது தொடர்பில் ஆச்சரியப்படுதற்கில்லை.
ஆம், புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எதிர்ப்போம் என மகிந்த ராஜபக்சா தரப்பு பகிரங்கமாக கூறிவிட்டது. இந்நிலையில் நீங்கள் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை எதிர்த்தால் அதனை அப்படியே கைவிடுவதுதான் ஒரே வழியயன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய தென்பது நீ எதிர்ப்பதற்காக மட்டுமல்ல என்னுடைய நினைப்பும் அதுதான். எனவே உன்னுடைய எதிர்ப்பை விட நான் முந்திக் கொண்டு புதிய அரசியலமைப்புக்கு முடிவு கட்டுவேன் என்பதாக நிலைமை இருக்கிறது.இத்தகையதோர் முடிவுதான் வரும் என்பதை தமிழ் மக்கள் தெட்டத்தெளிவாக உணர்ந்திருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதிமொழியும் அவர்கள் ரணில்விக்கிரம சிங்கவுக்கு வழங்கிய ஆதரவும் அரசியலமைப்புச் சீர்திருத்தம்
வெளியாகிவிடுமோ என்ற பிரமையை ஏற்படுத்தியிருந்ததும் உண்மைதான்.எதுஎவ்வாறாயினும் வெறுங்கையோடு இலங்கைபுத்தான் என்பதைப்போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எல்லாவற்றையும் இழந்து வெறுங்கையோடு தமிழ் மக்களை நோக்கி வருகிறது.இங்குதான் தமிழ் மக்கள் தங்களை உசார்படுத்தவும் தங்களை வீரச் செறிவுள்ளவர்களாக்கவும் வேண்டிய தேவையுள்ளது.
கேள்வி கேட்பதும் அவற்றுக்கு பதில் தருவதென்பதும் நெறிப்படுத்துவதற்கான ஒருவழிமுறையே அன்றி கேள்வி கேட்பது மட்டுமே உரிமையைப் பெற்றுத் தருவதாக ஒருபோதும் அமையாது.ஆகையால் ஒரு புதிய வழியைத் தேடுகின்ற மக்களாக தமிழ் மக்கள் தங்களை மாற்ற வேண்டியவர்களாக உள்ளனர்.இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்ற எச்சரிக்கைகள் எங்களை ஆற்றுப்படுத்துமேயன்றி அது பெரும்பான்மை சார்ந்தவர்களையோ அன்றி ஆட்சி அதிகாரத்தையுடையவர்களையோ ஒருபோதும் அதட்டாது.
அவர்களைப் பொறுத்தவரை நாங்கள் பலவீனப்பட்டுவிட்டோம். எமக்குப் பலமாக இருந்தவர்களை நாம் இழந்துவிட்டோம்.எனவே அவர்கள் கூறியதை ஏற்றுவாழ்வது தான் எங்களின் வாழ்வாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர்.இங்குதான் தமிழர்கள் இராஜதந்திர ஆயுதத்தை ஏந்தியும் தமக்கு ஏற்பட்ட இழப்பு என்ற மறையை பலமாகவும் தொட்டு புதிய பாதையில் சர்வதேசத்தை நோக்கியதான நகர்வை ஆரம்பிக்க வேண்டும்.
இதை விடுத்து தத்துவம் கூறுவதும் தர்ம உபதேசம் செய்வதும் பேரினவாதச் சிந்தனையை ஒருபோதும் திருத்தாது.அவ்வாறு திருத்துவதாக இருந்தால் அது தந்தை செல்வநாயகத்தின் காலத்திலேயே காரியமாயிருக்கும்.
எனவே நாங்கள் பலமாக இருக்கும்போது தான் அவர்கள் எங்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என சிந்திப்பார்கள்.அந்தச் சிந்தனை அமுலாகவேண்டுமெனின் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஒரு புதிய பாதையில் பயணிக்க வேண்டியது அவசியமாகும்.
ஆன்மிக சிந்தனை அடியோடு இல்லாது விட்ட நிலையில், சண்டித்தனங்களும் சர்வாதிகாரப் போக்குகளுக்கும் அதிகரித்துவிட்ட கொடுமை எமது தாயக மண்ணில்
இன்றைய நம் வாழ்வு என்பது அடிப்படை அம்சங்களை இழந்து போவதைக் காணமுடிகின்றது.ஆன்மிக சிந்தனை அடியோடு இல்லாது விட்ட நிலையில், சண்டித்தனங்களும் சர்வாதிகாரப் போக்குகளுக்கும் குறைவில்லை.சண்டித்தனம் உள்ளவர் பக்குவமானவர்களுடன் மோதத் தலைப்படுகின்றனர்.
இவ்வாறு எமது யாழ் மண்ணிலிருந்து கிடைத்த செய்தி ஒன்று தெரிவிக்கின்றது
மேற்படி செய்தியில் பின்வருமாறு பல அற்புதமான கருத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அதன் தொடர்ச்சி பின்வருமாறு அமைகின்றது.
ஒரு காலத்தில் இருந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும் இன்று இல்லை என்பதாக நிலைமை மாறிவிட்டது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
குறிப்பாக இன்றைய பொருளாதாரத்தின் தேவை காரணமாகக் கடினமாக உழைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் நேரப்பற்றாக்குறை என்ற விடயம் அனைவரையும் ஆக்கிரமிக்கவே செய்கிறது தவிர, இயந்திரவாழ்வு என்ற சக்கரத்துக்குள் எங்களை நாங்களே விழுத்திக் கொண்டோம். கையடக்கத் தொலைபேசியை ஒரு அரை மணிநேரம் நிறுத்தி வைக்க முடியாத அளவில் மனப்பதற்றம் பலரையும் ஆட்கொண்டுள்ளது.
வீதிகளில் வாகனம் செலுத்தும்போதும் தங்களை மறந்து தொலைபேசி உரையாடலை செய்கின்ற போதைத்தனம் அதிகமாக ஏறிவிட்டது.இதனால் விபத்துக்களும் உயிரிழப்புக் களும் என்ற துன்பம் சதா நடக்கிறது ஆன்மிக சிந்தனை அடியோடு இல்லாது விட்ட நிலையில், சண்டித்தனங்களும் சர்வாதிகாரப் போக்குகளுக்கும் குறைவில்லை.சண்டித்தனம் உள்ளவர் பக்குவமானவர்களுடன் மோதத் தலைப்படுகின்றனர்.
உபத்திரவம் வேண்டாம் என்று ஒதுங்குகின்றவர்களைப் பலயீனமானவர்களாகக் கருதி அவர்களுக்குச் சதா தொல்லை கொடுக்கின்ற நிட்டூரம் நடந்து வருகிறது.நிலைமை இதுவாக இருக்கையில், மனித வாழ்வை நெறிப்படுத்துகின்ற ஆன்மிகமும் ஆலய வழிபாடுகளும் பொருளாதாரத்தின் மையங்களாக மாறிவிட்ட துயரத்தை நினைக்கும்போது இதயம் கருகிக் கொள்ளும்.அந்தளவுக்கு எதற்கும் பணம் என்பதாக ஆன்மிகச் சூழல் மாறிவிட்டது.
நிலைமை இதுவென்றால் இல்லை, அரச தனியார் நிறுவனங்களில் நிலவுகின்ற கருத்து முரண்பாடுகள், அரச பணியை செய்வது என் கடமையும் தர்மமுமாகும் என்ற நினைப்பு இல்லாமல், நான் அதிகாரி ஆகையால் நான் சொல்வதைத்தான் அனைவரும் ஏற்கவும் பின்பற்றவும் வேண்டும் என்ற கர்வத்தனங்கள் தலை உச்சியில் நின்று உலுப்புகின்றன.
இதற்கு மேலாக, சில அமைப்புகளும் தனி நபர்களும் குழுமங்களும் தத்தம் சொல்லுக்கு ஆடாதவர்களை விமர்சிக்கவும் இடமாற்றவும் திறமையானவர்களைத் திறமையற்றவர் என்று நாக்கூசாமல் கூறவும் தலைப்பட்டுள்ளனர்.இதனால் அர்ப்பணிப்போடும் தர்ம சிந்தனை யோடும் சேவை புரிகின்றவர்கள்; சேவை புரிந்தவர்கள் மனக்கவலையுடன் இருப்பதைக் காணமுடிகின்றது.இவைதான் என்று மட்டும் கூறிவிட முடியாத அளவில், போதைப்பாவனை எங்கள் இனத்துக்கே ஈனம் செய்வது என்று கங்கணம் கட்டி நிற்கிறது.ஆக, ஒட்டுமொத்தத்தில் தர்மம், இறைநம்பிக்கை, பாவபுண்ணியக் கருத்துக்கள் என அத்தனை அறக் கோட்பாடுகளும் செயலிழந்து எங்கள் வாழ்வை நிர்மூலமாக்குகின்றன.இவை தொடர்பில் அனைவரும் கருத்தூக் கம் கொள்ளாவிட்டால், நிலைமை அதலபாதாளத்துக்குச் செல்வதை யாராலும் தடுக்க முடியாதென்றாகிவிடும்.