- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

‘மிஷன் சக்தி’ எந்த நாட்டிற்கும் எதிரானது இல்லை
இந்தியாவின் ‘மிஷன் சக்தி’ சோதனை எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல என வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: விண்ணில் செயற்கைகோளை ஏசாட் ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனை என்பது எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல. விண்வெளி துறையில், இந்தியா பெற்றுள்ள திறன், எந்த நாட்டையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்தாது. அதேநேரத்தில் நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்வதும், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சவாலை முறியடிப்பதும் அரசின் கடமையாகும். விண்ணில் பல செயற்கைகோள்களை இந்தியா செலுத்தி வருகிறது. அவற்றிற்கு நீண்ட தூர ஏவுகணை மூலம், ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டிஆர்டிஓ தலைவர் ஜி. சதீஷ்ரெட்டி கூறுகையில், நீண்ட தூரத்தில் உள்ள செயற்கை கோள்களை துல்லியமாக தாக்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.