- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை
மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகங்களில் சோதனை செய்ய அனைத்து மாநில அரசுளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், 3 குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரத்திற்கு கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன் இணைந்து விற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கன்னியாஸ்திரி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். குழந்தைகள் விற்பனை செய்ததை கன்னியாஸ்திரியும் ஒப்பு கொண்டுள்ளார்.
இந்நிலையில், மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைச்சர் மேனகா பிறப்பித்துள்ள உத்தரவில், அனைத்து குழந்தைகள் காப்பகங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனவும், குழந்தைகள் தத்தெடுப்பு பராமரிப்பு மத்திய அமைப்பில் இணைக்கப்பட்டுளளதா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த அமைப்பில் இணைந்துள்ள 2,300 காப்பகங்கள், தங்களிடம் உள்ள குழந்தைகள் குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.