- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி உத்தரவு
மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விபரீத முடிவுகளை மாணவர்கள் எடுக்க வேண்டாம் என்று வேண்டு கோளும் விடுத்துள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இரங்கல்
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மகள் அனிதா தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த அனிதாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரூ.7 லட்சம் நிவாரணம்
இந்த சம்பவத்தில் உயிரிழந்த அனிதா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு பணி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவ கண்மணிகள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மாணவர்கள் நலனில்…
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும், அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் செயல்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.