மலேசிய தாக்குதல் சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மலேசியாவில் வைத்து அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸார் மற்றும் அவருக்கு இரண்டாவது நபரான மஜிந்த ஜயசிங்க தாக்குதலுக்கு உள்ளானர்கள்.

இந்த தாக்குதல் சம்பவம் இலங்கையர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின்படி, இலங்கை தரப்பில் ராஜபக்சர்களின் பிரபல சூழ்ச்சிக்காரராக வழக்கறிஞர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கறிஞர் தீவிரவாதிகள் மற்றும் அரசியல் வன்முறைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு அடையாளப்படுத்துவதற்கும் தமிழர்கள் மற்றும் ராஜபக்சர்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்குமே செயற்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், உதவித்தொகையின் ஊடாக வெளிநாடுளில் தனது கற்கை நெறிகளை மேற்கொண்டுள்ளார். பின்னர் தமிழ் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஊடக நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச ஆட்சியின் புலனாய்வாளராக செயற்பட்டுள்ளார். அப்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அக்கட்சியின் பொது செயலாளரை ஜனாதிபதி தேர்தலின் போது ராஜபக்சர்களுடன் இணையவதற்கு இடைத்தரகராக செயற்பட்டவரும் இவராகும்.