- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

மயிலாடுதுறையில் பாஜக – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்
மயிலாடுதுறையில் பாஜகவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் உடைக்கப்பட்டன.
மெர்சல் படம் விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை விமர்சித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்புக் கொடி எந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பாஜகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வாகனங்கள் உடைக்கப்பட்டன.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த கருத்துகள் இடம் பெற்றதற்கு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யை வளைத்துப் போடுவதற்காக பாஜக திட்டமிடுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்திரராஜன், ‘விஜய்யை வளைத்துப்போட்டு அரசியல் செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. திருமாவளவன்தான் கட்டப்பஞ்சாயத்து செய்து கட்சி அலுவலக இடம் உட்பட பல நிலங்களை வளைத்துப் போட்டுள்ளார்’ என்றார்.
மேலும் பல்வேறு இடங்களில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.