- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

மம்தாவின் 40 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் சேருவர் : மோடி
மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் மே 23 தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பா.ஜ.,வில் இணையப்போகின்றனர் என பிரதமர் மோடி அதிரடியாக பேசினார்.
மே.வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜியின் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள, ஸ்ரீராம்பூர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ” மேற்கு வங்கத்தில் மம்தாவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய விரும்புகின்றனர். நாடுமுழுவதும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் எல்லா பக்கமும் தாமரை மலர்ந்திருக்கும், இங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் மே 23 தேர்தல் முடிவுகள் வந்தவுடன் பா.ஜ.,வில் இணைய உள்ளனர். ” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடந்த 4 வது கட்டத் தேர்தலில் ஜம்முவி பகுதி அசன்சாலில் திரிணாமுல் மற்றும் பா.ஜ., தொண்டர்கள் இடையில் மோதல் நடந்தது. மேலும், சமீபத்தில் மம்தா- மோடி இடையே வார்த்தைப்போர் வலுவடைந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு தேர்தல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.