மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!

மம்தாவை பின் சீட்டில் அமர வைத்து, ஆபீஸ் வரை சென்ற பின் தான், பெருமூச்சு விட்டார், அமைச்சர் ஹக்கீம். ஆபீசிலிருந்து திரும்பும் போது, மம்தா தானாகவே ஸ்கூட்டியை ஓட்ட முயற்சித்தார்; முடியவில்லை. போலீஸ்காரர்கள், ‘பேலன்ஸ்’ செய்யும்படியாகிவிட்டது.

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, சமீபத்தில் கோல்கட்டாவில், மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்தார்.

போராட்டத்திற்கு முதல் நாள், மேற்கு வங்க அமைச்சர் ஹக்கிமை போனில் அழைத்து, ‘நாளைக்கு, நான் மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்ய வேண்டும்; ஸ்கூட்டருக்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என, உத்தரவிட்டார். இதைக்கேட்டு, அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்; காரணம், அவருக்கு ஸ்கூட்டர் ஓட்டத் தெரிந்தாலும், பல ஆண்டுகளாக ஸ்கூட்டரைத் தொட்டதில்லை.

மேலும், மம்தாவை பின் சீட்டில் உட்கார வைத்து, ஸ்கூட்டரை ஓட்ட வேண்டும். உடனடியாக மின்சார ஸ்கூட்டரை வாங்கினார். போராட்டத்துக்கு முதல் நாள் இரவு, தன் மனைவியை பின் சீட்டில் அமர்த்தி, ஸ்கூட்டியை ஓட்டிப் பார்த்தார். அடுத்த நாள். போக்குவரத்து பிரச்னை வரக் கூடாது என்பதற்காக, ஸ்கூட்டி செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.