மனிதன் இயற்கையின் சக்தி…நம்புவோம்…

1.ஓர் அணுவில் இருந்து உருவானதே பிரபஞ்சம்

2.இயற்கை எதை எல்லாம் உணர்ந்ததோ அதுவே இன்றைய பிரபஞ்சம்

3.இயற்கை உணர்ந்த அனைத்தும் பிரபஞ்ச அணுவில் பதுந்து கிடக்கிறது. அதுவே பிரபஞ்ச மனது.

4.பிரபஞ்சம் இயங்கும் விதம் அந்த பதிவுகளை பொருத்ததே

5.பிரபஞ்ச மனதின் மேம்பட்ட பரிணாம வளர்ச்சியே மனித மனம்

6.இயற்கை எதை உணர்கிறதோ அதை மனது வடிவமைக்கிறது

7.நம் உடல் பஞ்ச பூதங்களால் கட்டமைக்கபட்டது. எனவே நாமும் இயற்கைதான்

8.நாம் எதை உணர்கிறோமோ அது மனதால் வடிவமைக்கபடுகிறது

9.மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம்,அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்

10.பிரபஞ்ச மனம் இயற்கையை கட்டுபடுத்த மனித மனமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது

11.மனித மனம் இப்படி பல்வேறு மாயையில்சி க்குண்டு கொள்ளும் என்று தெரிந்திருந்தால்பி ரபஞ்ச மனம் பரிணாம வளர்ச்சியே அடைந்திருக்காது
 

12.கவனம் குவியும் இடத்தில் சக்தி பாயும்இ எதை பாவிக்கிறாயோ அது அப்படியே ஆகும்

13.நாளை நடக்கபோகும் விபத்து,என்றோ ஏற்பட்ட நிகழ்ச்சியின் தாக்கமே

14. மனது எண்ணங்களை உருவாக்கி உடல்அ ணுக்களை குறிப்பிட்ட அலைவரிசையில்

அதிர செய்து பிரபஞ்ச அணுக்களின் தன்மையை மாற்றி தனக்கு தேவையானதை

வடிவமைத்துக் கொள்கிறது

15. இதிலிருந்து மனிதன்தான் இயற்கையால்க ட்சிதமாக வடிவமைக்கபட்ட மேம்பட்ட சக்தி

என்பது புரிகிறது அல்லவா

 

தேடல்: புஷ்பா கிறிஸ்ரி