மக்கள் பிரச்னை தெரியாத ‛ரஜினி’- கருத்து கந்தசாமி ‛கமல்’: பன்னீர் விளாசல்

ஆட்சி ஒராண்டு கடந்து இருப்பது நம்மை எதிர்ப்பவர்களுக்கு முதல் அதிர்ச்சியாக உள்ளது என துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார் சென்னையில் நடைபெற்ற முதல்வர் பழனிசாமி அரசின் ஓராண்டு சாதனை விழாவில்துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது: எங்களுக்கு குழி பறிக்க நினைப்பவர்களை விடமாட்டோம்.தனக்கு வந்த சோதைனையை எதிர் நீச்சல் போட்டு கடந்து வந்துள்ளார் முதல்வர் பழனிசாமி . அவருக்குஉறுதுணையாக நிற்போம்.

கமல் ரஜினி மீது விமர்சனம்

அரசியலுக்கு புதிது புதிதாக வருகிறார்கள். மக்கள் பிரச்னை பற்றி சிந்திக்காதவர்கள் சிஸ்டம் பற்றி சிந்திக்கிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றம் சாட்டினார். மேலும் சிலர் கருத்து கந்தசாமிகளாகவும் இருப்பதாக நடிகர் கமல் மீதும் குற்றம் சாட்டினார். பூனைகள் கூடியானையை அசைத்து பார்க்க நினைக்கின்றனர். அது ஒரு போதும் நடக்காதுஅரசியல் பற்றி தெரியாதவர்களுக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கப்போகிறது. என துணைமுதல்வர் பன்னீர் செல்வம் கூறினார்.

முதல்வர் பழனிசாமி பேச்சு

ஏங்கி நிற்கும் மக்களை நாங்கள் தாங்கி நிற்கிறோம் என முதல்வர் பழனிசாமி பேசினார். மேலும் உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் முக்கியத்துவம் தரும் இயக்கம்அதிமுக. வறட்சியில் இருந்து தமிழகம் விரவைில் மீள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வியில் சிறந்த மாநிலம் என்ற பாரதியாரின் பாடலுக்கு உயிர்கொடுத்துவருகிறோம். உடலுறுப்பு தானம் , உடலுறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது.
தேர்தலை மையமாக கொண்டு இந்த அரசு செயல்படவில்லை. மக்களின் தேவையை அறிந்து அரசு செயல்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் 15 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக சேமிக்கும்அளவிற்கு அணை தூர் வாரப்படும். கோவையில் விரைவில் மெட்ரோ ரயில் சேவைதிட்டம் செயல்படுத்தப்படும். ஹார்வர்டு பல்கலையில் தமிழ்இருக்கைஅமைய தமிழக அரசு ரூ.10 கோடி வழங்கி உள்ளது ப்பட்டுள்ளது.100 சதவீதம் கல்வி பெற்ற மாநிலமாக தமிழகம் உருவாகும். அரிதாரம் பூசிய முகம் எது உண்மை முகம் எது என்பது தமிழக மக்களுக்கு தெரியும். ஏதோ ஒரு காரணத்திற்காக கட்சியில் இருந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைவார்கள் என முதல்வர் பழனிசாமி கூறினார்.

விழாவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒராண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டது. அரசின் சாதனை மலரை முதல்வர் பழனிசாமி வெளியிட துணை முதல்வர் பன்னீர் செல்வம் பெற்றுக்கொண்டார்.