- காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்
- நடிகர் விவேக் உடல்நிலை மோசம்: தொடர்ந்து எக்மோ சிகிச்சை
- அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி
- நீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்
- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!

மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதானா?- ஹெச்.ராஜா கிண்டல்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னையும் இணைத்து இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணையத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செவ்வாய் கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. கட்சியில் ஆட்களை சேர்ப்பதற்காக கிடைக்கும் இ-மெயில் முகவரிகளுக்கெல்லாம் கமல்ஹாசன் அழைப்பு அனுப்புகிறார்” எனக்கூறி தமிழிசை கிண்டலடித்தார்.
இதையடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இ-மெயில் அனுப்பப்படுவதாக அக்கட்சி விளக்கம் அளித்தது. மேலும், தமிழிசை தன்னுடைய செல்பேசி எண், ஆதார் எண் விவரங்களுடன் கட்சியில் சேர பதிவு செய்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும், அதனை வெளியிட விரும்பவில்லை எனவும் அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மக்கள் நீதி மய்யத்தில் தன்னையும் இணைத்து இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளதாக, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இதுதான்” என குறிப்பிட்டுள்ள ஹெச்.ராஜா, அதற்கான படங்களையும் இணைத்துள்ளார்.