மகிந்தாவை பின்பற்றும் நல்லாட்சி அரசு செயலளவில் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு நல்குமா??

Editorial

கனடாஉதயன் கதிரோட்டம்  25-11-2016 வெள்ளிக்கிழமை

மகிந்த ராஜபக்;சாவைவீட்டுக்குஅனுப்பிவிட்டு இலங்கையில் நல்லாட்சிஅரசு” என்ற பெயரில் ஒருஆட்சியைஏற்படுத்தநியாயவிரும்பிகள் விரும்பினார்கள். அதற்கேற்ப நான்கு திசைகளிலும் திட்டங்கள் தீட்டப்பட்டு அனைவரும் ஒன்றாக செயற்பட்டு இந்த நல்லாட்சி அரசு பதவியேற்றது. மைத்திரி பாலசிறிசேனா ஜனாதிபதியாக வந்ததோடு மட்டுமல்லாமல் ரணில் அவர்களை பிரதமராக்கியதும் இந்த நலலாட்சி அரசுதான். ஆனால் இந்தரணில் விக்கிரமசிங்கவின் “நரிக்குணம்” எமக்குத் தெரிந்தது இன்று நேற்றல்ல. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்குசமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற போதேரணில் தன்னுடைய கபடத்தனத்தை அரங்கேற்றினார். இவ்வாறான நிலையில் இலங்கையின் இனப்பிரச்சனை தீர்க்கப்படும் என்று மைத்திரியும் ரணிலும் அடிக்கடிபேசிவந்தாலும்,அதை நிஜமாக்கும் முயற்சிகள் நடப்பதாகத் தெரியவில்லை.

அண்மையில்,ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது“இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான விடயத்தில் பெரும்பான்மைசிங்களமக்களின் அபிப்பிராயங்களும் செவிமடுக்கப்படும். தேவையானால் வாக்கெடுப்பும் நடத்தப்படும்”என்றஅர்த்தத்தில் கூறியிருக்கின்றார். ஆனால் ஜனாதிபதி மைத்திரி நேற்றைய முன்தினம தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்து தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு குழப்பமான தோற்றம் ஒன்று எமது மனக்கண்களுக்கு நன்குதெரிகையில்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருசிவசக்திஆனந்தன் அவர்களது கருத்துக்களைநாம் சற்றுகவனிக்கவேண்டும்.

அவர் தனதுகருத்துப் பரிமாற்றத்தில் “நல்லாட்சிஅரசும் தமிழர்களின் மனங்களை வெல்ல முயற்சிக்கவில்லை” என் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை மைதானத்தில் நாளை 26ஆம் திகதி படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சிமற்றும் களியாட்ட நிகழ்வு தொடர்பாககருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசு பயங்கரவாதத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்த நிலையில் அவர்களை நினைவுகூர வேண்டிய தார்மீகப் பொறுப்புதமிழ் மக்களிடம் உள்ளது.இதேவேளை, இந்த நினைவுகூரும் நிகழ்வை இம்மாதம் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து வருகின்றனர். இந்தநிலையில் இசை நிகழ்வுகள் மற்றும் களியாட்டநிகழ்வுகள் ஆகியவற்றை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

இராணுவத்தில் இருந்து பலியானவர்களுக்கு வெற்றிவிழா கொண்டாடுவதுடன் இராணுவவீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.அரசுக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பி. போன்ற அமைப்பினர் தங்கள் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருகின்றனர்.இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் தங்களது விடிவுக்காக உயிரிழந்தவர்களையும் அரசு பயங்கரவாத்தால் பலியான தமது உறவுகளையும் நினைவுகூரத் தடைவிதிப்பதும் அந்தநாட்களில் இசை நிகழ்வுகளை நடத்துவதும் நல்லாட்சிஎனப்படும் தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றிபெற்ற அரசின் செயற்பாட்டுக்கு உகந்ததல்ல.மஹிந்த ராஜபக்சதாம் நடத்தியபோரில் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியாத நிலை காணப்பட்டது. இதனால் அவர் தேர்தல்கதளிலும் தோல்வியைத் தழுவினார்.  அவரது ஆட்சிக் காலத்து நிலைமை யேதற்போதைய அரசும் ஏற்படுத்த முனைகின்றது.எனவே,தமிழர்களின் புனித மாதத்தில் அவர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூரும் நிலையில் இறை நிகழ்வுகள் நடத்துவதை நிறுத்தி தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்” – என்று அறைகூவல் விடுத்துள்ளார் வன்னிமாவட்ட எம்பி திருசிவசக்தி ஆனந்தன்.

இவ்வாறாக மனந்திறந்து பேசும் சிலபாராளுமன்றஉறுப்பினர்கள் உள்ளதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவில் சிலர் தங்கள் “நலன்” பாதுகாக்கப்படுவது தொடர்பாகவே பேசி வருகின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் எமதுதமிழ் மக்கள் ஏமாற்றப்படுவது மீண்டும் ஒரு தடவை நிச்சயமாக அரங்கேறும் என்பதையே நாம் கூறிவைக்க விரும்புகின்றோம்.

தமிழகத்தின் தரமானசஞ்சிகைகளில் ஒன்றான“கணையாழி”தனதுகனடாச் சிறப்பிதழைவெளியிடுகின்றது

editorial-26-11-2016-image2

தமிழகத்திலிருந்து மாதந்தோறும் வெளியாகும் கணையாழி என்ற இலக்கியச் சிற்றிதழ்,எதிர்வரும் தை, 2017க்குரிய சிற்றிதழைக் கனடாச் சிறப்புமலராக வெளியிட எண்ணியுள்ளது.

இந்த மலரில் இடம்பெறவல்ல,கனடா தொடர்பாக ஆக்கங்கள் கனடாத் தமிழ்ப் படைப்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்டுகின்றன. ஆக்கங்கள் கனடா,கனடாத் தமிழர் வாழ்வியல் என்பனபற்றி அமைய வேண்டும். இவை கவிதை,கட்டுரை,சிறுகதை,குறுநாடகம் போன்ற வடிவங்களில் அமையலாம். சிறுகதை,கட்டுரை,குறுநாடகம் என்பன 300 சொற்களுக்கு மேற்படாதிருத்தல் வேண்டும். கவிதை இரு பக்கங்களுக்கு மேற்படலாகாது.

ஆசிரியர் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட தரமானபடைப்புகளே சிறப்பிதழில் வெளிவரும். படைப்புகள் நவம்பர் 30ம் திகதிக்குள் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு யுனிக்கோட் எழுத்துருவடிவத்தில் அனுப்பிவைக்கப்படவேண்டும்.மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளத் தொடர்புகொள்ளுங்கள்.கனடாச் சிறப்பிதழ் வெளியீட்டுக் குழு மின்னஞ்சல்: canadakanaiyazhi@gmail.com647.922.1432

கொன்சர்வேர்ட்டிவ்க ட்சிவேட்பாளர்நி மால்வி னாயகமூர்த்திக்குபோலாந்துக்க னேடியகாங்கிரஸ்த லைவர்ஆ தரவு

editorial-26-11-2016-image1

மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் கொன்சவேடிவ் கட்சியின் சார்பில் 2018ம் ஆண்டு நடைபெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில்போட்டியிடவிருக்கும் வேட்பாளரான நிமால் வினாயக மூர்த்திக்கு கொன்செர்வேடிவ் கட்சியின்  மிஸ்ஸிசாகாஈஸ்ட்-குக்ஸ்வில் தொகுதியின் முன்னாள்  கனேடிய பாராளுமன்ற உறுப்பினரும்,போலாந்துக் கனேடியகாங்கிரஸ் அமைப்பின் தற்போதைய தலைவருமான திரு. இலடிஸ்லோவ் லிசோன்  அவர்கள் தனது முழுமையான ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் திருநிமால் விநாயக மூர்த்தியை வைபவம் ஒன்றில் சந்தித்துஉரையாடியஅவர் “மனிதஉரிமைகள் பற்றிய பல ஆக்க பூர்வமானசெயற்பாடுகளில் நீங்கள் ஈடுபடுகின்றீர்கள். தமிழ் மக்களைப் போன்று போலந்துநாட்டுமக்களும் நீண்ட காலமாக நில உரிமையும்,வாழ்வுரிமையும் மறுக்கப்பட்டவர்கள் எனவே ஈழத்தமிழர் ஆகியஉங்கள் பிரச்சினைகளை ஓரளவேனும் என்னால் விளங்கிக்கொள்ளமுடியும்.  உங்களது முயற்சிகளுக்கு எனதுஆதரவு என்றும் உள்ளது,மார்க்ஹம்-தோன்ஹில் தொகுதியில் உங்கள் பெயர் முன்மொழிவுத் தேர்தலில்  வெற்றி பெறுவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார்” எனவும் குறிப்பிட்டார்.

மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்ல தமிழ் உணர்வாளர்களும் மார்க்கம் தோன்ஹில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக நிமால் வினாய மூர்த்தியே வரவேண்டும் என்றுகருத்துத் தெரிவித்தனர்.  ‘இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள் குறித்துபற்றிக் பிரவுண் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருக்கக்கூடியசரியானதேர்வுநிமால் வினாயகமூர்த்திதான்’ என்ற கூற்றும்  இப்போது பரவலாக இப்போது பேசப்படுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


வேலைவாய்ப்பு

ஸ்காபுறோவில் நல்லநிலையில இயங்கிவரும் வாராந்தப் பத்திரிகைஅலுவலகத்தில் பின்வரும் பகுதிநேரவேலைவாய்ப்புக்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்லஅறிவுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். இதுதொடர்பானநேர்முகப் பரீட்சையும் இடம் பெறும்.  அத்துடன் கொம்பியூட்டர் தொடர்பானவிடயங்களும் அவசியம்.

1 Type Setters and Layout staff
2 Reporters
3 Office Assistant
4 Marketing Representatives

மேலதிகவிபரங்களுக்கு 416 732 1608 என்னும் இலக்கத்தைஅழைக்கவும்