மகாதேவன் மரணம்! பரோலில் வருகிறார் சசிகலா?

சசிகலா 2வது அண்ணன் வினோதகனின் மகன் டி.வி. மகாதேவன் இன்று மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு வயது 47, தஞ்சாவூரில் வசித்து வந்த அவர் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கசுவாமி கோயிலுக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்துள்ளது.

தற்போது அவரது உடல் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக பதவி வகித்து பின்னர் விடுவிக்கப்பட்டார்.

தற்போது அண்ணன் மகன் உயிரிழந்துள்ளதால், இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய்மாமா மகன் மகாதேவன் உடலுக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் தஞ்சை செல்கிறார்.

மகாதேவன் மரணம் குறித்து பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகளிடம், பரோலில் செல்வதற்கான நடைமுறைகளை சசிகலா கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அப்போது, சசிகலாவை பரோலில் விடுவது குறித்து சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்யும் என தெரிகிறது.

இது குறித்து பேட்டி அளித்த டிடிவி தினகரன் மகாதேவன் மரணம் குறித்து சசிகலாவுக்கு தெரிவிக்கபட்டு உள்ளது. சசிகலா விரும்பினால் அவர் பரோலில் வர ஏற்பாடு செய்யப்படும். என கூறினார்.