மகா­நா­யக்க தேரர்கள் பிர­த­ம­ரிடம் கடிதம் மூலம் கோரிக்கை

(எம்.எம்.மின்ஹாஜ்)

உத்­தேச அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்­சிக்கு எந்­த­வொரு பாதிப் பும் ஏற்­படக் கூடாது. அத்­துடன் மாகாண சபை அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்கப்படும்போது மாகாண சபையின் அதி­கா­ரங்கள் மத்­திய அர சின் நிறை­வேற்று அதி­கா­ரத்தின் கீழ் காணப்­பட வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை தொடர்ந்தும்  வழங்­கப்­பட வேண்டும் என அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து மகா­நா­யக்க தேரர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளித்த இரண்டு கடி­தங்­க­ளி­லேயே வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

இன­வாதம் போன்ற குறு­கிய கொள்­கை­க­ளுக்குள் தற்­போ­தைய சவால்­களை வெற்றி கொள்ள முடி­யாது என்­பதை ஏற்றுக் கொள்­கின்றோம். ஆனாலும் நாட்டின் ஒரு­மைப்­பாட்டை முன்­னெ­டுத்து செல்லும் போது உரு­வாகும் தேசிய நல்­லி­ணக்­கத்­திற்கு பாதிப்­பான விட­யங்­களை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என்றும் மஹா­நா­யக்க தேரர்கள் தமது கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

அத்­துடன் வடக்கு கிழக்கில் விகா­ரை­களை பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் தேரர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அஸ்­கி­ரிய, மற்றும் மல்­வத்து மஹா­நா­யக்க தேரர்­களை நேற்று முன்­தினம் சந்­தித்து ஆசிப்­பெற்றார். இந்த சந்­திப்பின் போது புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்­தான மகா­நா­யக்க தேரா­களின் கையொப்­பத்­துடன் கூடிய இரு விசேட கடி­தங்கள் பிர­த­ம­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் ஐந்து அம்­சங்­களை கொண்ட இரு கடி­தங்­களை மகா­நா­யக்க தேராகள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளித்­துள்­ளனர்.

பிர­த­ம­ரிடம் கைய­ளித்த மகா­நா­யக்க தேரா­களின் கடி­தத்­ததில் மேலும் தெரி­விக்­கப்ட்­டுள்­ள­தா­வது,

உத்­தேச அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்­சிக்கு எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­பட கூடாது.அத்­துடன் மாகாண சபை அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்கும் போது மாகாண சபையின் அதி­கா­ரங்கள் மத்­திய அரசின் நிறை­வேற்று அதி­கா­ரத்தின் கீழ் காணப்­பட வேண்டும். அதே­போன்று புதிய அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை தொடர்ந்தும் வழங்­கப்­பட வேண்டும்.

தேசிய கொள்­கை­களை வகுக்கும் பூரண அதி­காரம் மத்­திய அர­சாங்­கத்தின் கீழ் இருக்க வேண்டும். அத்­துடன் முக்­கி­ய­மான சில சந்­தர்ப்­பங்­களின் போது சிங்­கள மொழியை மூலா­தா­ர­மாகக் கொண்டு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும்.

மேற்­கு­றித்த கார­ணங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­பட வேண்டும். இத­னையே அர­சாங்கம் பிர­தான கோரிக்­கை­யாக கொண்டு செயற்­பட வேண்டும் என மகா­நா­யக்க தேரா­களின் கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­போது விசேட கோரிக்­கைகள் கொண்ட கடி­த­மொன்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது

புதிய அர­சி­ய­ல­மைப்­பாக இருக்­கலாம் அல்­லது அர­சி­ய­ல­மைப்பு மறு சீர­மைப்பு நட­வ­டிக்­கை­யாக இருக்­கலாம் இதன்­போது அர­சாங்கம் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய செயற்­பா­டுகள், வடக்கு கிழக்கு மாகாண சபை­க­ளுக்­கான விசேட அதி­கா­ரங்­களை வழங்­கு­வது தொடர்­பன விட­யங்கள் குறித்த கடித்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இன­வாதம் போன்ற குறு­கிய கொள்­கை­க­ளுக்குள் தற்­போ­தைய சவால்­களை வெற்றி கொள்ள முடி­யாது என்­பதை ஏற்றுக் கொள்­கின்றோம். ஆனாலும் நாட்டின் ஒரு­மைப்­பாட்டை முன்­னெ­டுத்து செல்லும் போது உரு­வாகும் தேசிய நல்­லி­ணக்­கத்­திற்கு பாதிப்­பான விடயங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என மஹாநாயக்க தேரர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சரணாலயங்கள் மற்றும் தொல்பொருளியிலுக்கு சொந்தமான காணிகளில் குடியேற்றங்களை அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.அத்துடன் வடக்கு கிழக்கில் விகாரைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.