போராட்டம் வரலாறு ஆனது – ஜிவி பிரகாஷ்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாகபோராட்டம் நடந்து வந்த நிலையில், பல ஊர்களுக்குநேரடியாக சென்று

போராட்ட களத்தில் போராடியவர் ஜிவி பிரகாஷ் குமார். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரலும் கொடுத்துவந்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிஅளிக்கப்பட்டும் சென்னை, மதுரை உள்ளிட்ட சிலஊர்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். சிலஇடங்களில் வன்முறை சம்பவம் நடந்தது.

இந்நிலையில் இதுப்பற்றி ஜி.வி.பிரகாஷ்குமார் கூறியிருப்பதாவது… “அரசுகள்உங்களாலே அவசர சட்டம் இயற்றி பணிந்தது, போராட்டம் வரலாறு ஆனது. இன்னும்தீர்க்கப்படாத நிறைய பிரச்சனைகள் முன்னெடுத்து செல்ல வேண்டியவர்கள் நீங்களே. தமிழக மக்களின் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை என் அன்பு சகோதர சகோதரிகளேநீங்கள் மட்டுமே. தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். அதோடு, வன்முறை சம்பவம் தொடர்பாக அவர் பேசுகையில், காவல்துறைக்குப் பயிற்சியளிக்கும்போது, “கல்” எறிய கற்றுத் தருகிறார்களா..? தலைமையில்லாமல் தானாக முன்வந்துதங்கள் உரிமைக்காக மக்களே போராடும் போது, அதை அரசு எப்படி அணுக வேண்டும்..?” என்று கூறியுள்ளார்.