- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

போதை பொருள் விவகாரம்: நடிகைகள் தீபிகா படுகோன், சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் கைது?
பாலிவுட்டில் போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக, நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு இந்திய தேசிய போதை பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது.
பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் கைதாகியுள்ளஅவரது காதலி ரியா சக்கரவர்தத்தியிடம் நடத்திய விசாரணையில் சுசாந்த் சிங்கும் தானும் போதை பொருள் பயன்படுத்துவதாக கூறியதையடுத்து அவர் அளித்த வாக்குமூலத்தில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் போதை பொருள் பயன்டுத்துவது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மஹாராஷ்டிர மாநில போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரித்து வருகிறது.
இதில், பிரபல பாலிவுட் நடிகை, தீபிகா படுகோனேவின் மேலாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ‘தேவைப்பட்டால், தீபிகா படுகோனேவிடமும் விசாரணை நடத்தப்படும்’ என, போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை தீபிகா படுகோனே செப். 25-ம் தேதியும், நடிகைகள் சாராஅலிகான், சாரதா கபூர், ராகுல் ப்ரீத்சிங் ஆகியோர் செப் 26-ம் தேதியும் நேரில் ஆஜராகுமாறு போதை பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது.