பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, இன்று (ஜன.8) இரவு 9.50 மணிக்கு லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. 

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு, ஜனவரி 7 ம்தேதி அறிவித்தது. 

பார்லிமென்ட் கூட்டத்தொடர் ஜனவரி 7 ம்தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஓரு நாள் நீட்டிக்கப்பட்டது.


10 சதவீத இடஒதுக்கீடு மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பிறகு இரவு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.. மசோதாவிற்கு ஆதரவாக 323 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் கிடைத்தன. இதனையடுத்து, மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.

மசோதா குறித்த ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் அதிமுக வெளிநடப்பு செய்தது.

மசோதா, லோக்பாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாளை ( 9ம் தேதி) ராஜ்யசபாவில் இதுகுறித்த விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.