பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன

கொரொனா காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், முடங்கியுள்ள பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன.

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. டில்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால், ஏராளமான மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஏழைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் காத்து கிடக்கின்றனர். அவர்களுக்கு பல சமூக அமைப்புகள் உதவி வருகின்றன. உணவு, குடிநீர், உடை உள்ளிட்டவற்றை பல அமைப்பினர் வழங்கி வருகின்றனர். மும்பை மற்றும் இந்தூரில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களையும் ஹிந்து அமைப்புகள் வழங்கினர்.

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் மற்றும் நகரும் கழிப்பறை வசதிகளை விஎச்பி அமைப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

அதேபோல், இந்தூரில் ராதா சாமி சத்சங் வளாகத்தில் செயல்படும் கொரோனா சிகிச்சை மையத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு கவனித்து கொள்ளும் என அறிவித்து உள்ளது. அந்த மையத்திற்கு தேவையானை அனைத்து வசதிகளையும் செய்து தருவோம் என ஆர்எஸ்எஸ் கூறி உள்ளது.