“பைரவிநுண்கலைக் கூடம்” நடத்திய “இசைச்சாரல்” போட்டிநிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் சிறப்பாகநிறைவுற்றன

கனடாவில் புகழ்பெற்ற இசைப் பயிற்சிநிறுவனங்களில் ஒன்றானபைரவிநுண்கலைக் கூடம்” நடத்திய “இசைச்சாரல்” போட்டிநிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் கடந்த சனிக்கிழமையன்று சிறப்பாக நிறைவுற்றன.

மேற்படிபாடல் போட்டி நிகழ்ச்சியை நடத்துவதற்கு “பைரவி நுண்கலைக் கூடம்” நிறுவனத்தின் அதிபரும் ஆசிரியருமான ஜெயச்சந்திரன் மாஸ்டர் அவர்களுக்கு அவரது துணைவியார் மைத்துனர்மார் மற்றும் வர்த்தகப் பெருமக்கள், பெற்றோர் மாணவமாணவிகள் மறறும் ஊடகவியலாளர்கள் நடுவர்களாக பணியாற்றிய இசைக் கலைஞர்கள் ஆகியோர் மிகவும் ஒத்தாசையாக இருந்தார்கள்.

போட்டியில் கலந்துகொண்ட பாடகபாடகிகள் அனைவருமே “பைரவிநுண்கலைக் கூடத்தில் வாய்ப்பாட்டு தவிர்ந்த ஏனைய வாத்தியக் கருவிகள் கற்றுக்கொள்ளும் இசை ஆர்வம் கொண்ட மாணவ மாணவிகளே ஆவார்கள்.

இவர்கள் அனைவரும் அதிபரும் ஆசிரியருமான ஜெயச்சந்திரன் மாஸ்டர் அவர்கள் வழங்கிய நம்பிக்கையும் ஊக்கத்தாலுமே இந்தபாடல் போட்டியில் பங்கு பற்றினார்கள் என்பது இங்குகுறிப்பிடத்தக்க விடயமாகும்.இறுதிச் சுற்றுப் போட்டிகள் கனடாகந்தசாமி ஆலய மண்டபத்தில் கடந்த சனிககிழமையன்று நடைபெற்றன. போட்டிகளுக்கு நடுவர்களாக திருவாளர்கள் வர்ணராமேஸ்வரன், பாபு ஜேயகாந்தன், சிவகுமாரன் (சிவா) மற்றும் திருமதி சியாமளா இராமச் சந்திரன், பாடகிலக்சுமி ஆகியோர் பணியாற்றினர், பாடக பாடகிகளின் தமிழ் உச்சரிப்பு தொடர்பான அவதானிப்புக்கு நடுவர்களான திருமதி கோதை அமுதன் மற்றும் வானொலி அறிவிப்பாளர் ரஞ்சித் ஆகியோர் பணியாற்றினர்.

உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மண்டபம் நிறைந்த விழாவாக நடைபெற்ற மேற்படி இறுதிச் சுற்றுப் போட்டிகளில் அனைவருமே மிகுந்த உற்சாகத்துடன் கண்டு களித்து பாடக பாடகிகளுக்கு ஊக்கத்தை அதிகரிக்கும் வண்ணம் பாராட்டுக்களை அள்ளி வழங்கினார்கள். இறுதிச் சுற்றுப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை முறையே செல்வன் அகிலப் பிரதன் முகுந்தா,செல்வன் ஏரன் மயூரன்,செல்வன் தர்மினன் சத்தியசீலன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.அவர்களுக்கு பணப்பரிசுகளும் சான்றிதழ் மற்றும் பரிசுப் பொதி ஆகியன வழங்கப்பெற்றன.

(படங்களுக்கு நன்றி புதினம் திருகுணாஅவர்களுக்கு)