- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது
நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு எடுத்து கொள்வதற்காக கடந்த டிசம்பர் 22ந்தேதி அமெரிக்கா சென்றார். அவரது மனைவி லதா உள்ளிட்ட குடும்பத்தினரும் உடன் சென்றனர். ஜனவரி 10ந்தேதி வரை 3 வாரங்கள் அங்கு தங்கி ஓய்வு எடுத்து கொள்வார் என தகவல் வெளியானது. அமெரிக்காவில் தங்கும் ரஜினிகாந்த் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தனது ஓய்வை முடித்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள்.
பேட்ட திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மிக்க சந்தோஷம். அவர்களை சந்தோசப்படுத்துவதே முக்கியம். அவர்களின் சந்தோசமே நமது சந்தோசம் என கூறினார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.