பெற்றிக் பிரவுண் ஸ்காபுறொ நகரில் உள்ள ஜேசிஎஸ் மண்டபத்தில் தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில்

” I do respect the value and beauty of the Tamil Community of Ontario. Whenever I hear about a Tamil Event in GTA, I always travel from any part of this province. This Community played a very big role to elect me as the Leader of the Ontarion Conservative Party.
In the Provincial Election-2018, there are three Tamil speaking candidates joining with me to form our Conservative Government. Therefore the Community should make sure to support and be with the three candidates, to send them to Queens Part with me”
Said byPatrick Brown, the Leader of the Ontario Conservative Party and the Office Opposition Leader of the Ontario legislature , today at JCS Banquet Hall in Scarborough.
Canada Uthayan News Unit.
இன்று மாலை ஒன்றாரியோ கொன்சர்வெரட்டிவ் கட்சியின் தலைவரும் ஒன்றாரியோ மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான திரு பெற்றிக் பிரவுண் ஸ்காபுறொ நகரில் உள்ள ஜேசிஎஸ் மண்டபத்தில் தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்.
கனடிய தமிழ் கொன்சேர்வேட்டிவ் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் எதிர்வரும் ஒன்றாரியோ மாகாணத் தேர்தலில் மூன்று வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடும் தமிழ் பேசும் வேட்பாளர்களான திருவாளர்கள் லோகன் கணபதி, விஜேய் மற்றும் தேனுஜா பரணி ஆகியோரும் அவரோடு தலைமை மேசையில் அமர்ந்திருந்து பத்திரிகையாளர்களோடு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டும், அவர்களின் வினாக்களுக்கு விடைகளைப் பகிர்ந்தும் தங்கள் பணியைச் செய்தார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் திரு பற்றிக் பிரவுண் தனது உரையில், ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள தமிழ் சமூகம் மிகவும் உயர்ந்த நிலைக்குச் சென்றுள்ளதாகவும், இந்த சமூகத்தை தான் நன்கு மதிப்பதாகவும் தெரிவித்ததோடு, சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சியின் தலைவருக்;கான தேர்தலில் தன்னை தலைவராக்குவதில் நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் சமூகத் தலைவர்களும் தொண்டர்களும் தீவிரமாக பணியாறறியதாகவும் மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.