- கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை
- இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு - 3 பேர் உயிரிழப்பு
- பொது செய்தி தமிழ்நாடு 'நீட்' பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு
- ஸ்ரீ ராம நவமி - ஏப்ரல் 21
- பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன

பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல்
ஆமதாபாத் : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அக்டோபர் 9 முதல் 11 வரை அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார், ராகுல். சோட்டா உதய்பூரில் இளைஞர்கள் இடையே பிரசாரம் செய்வதற்காக அவர் சென்றுள்ளார். அங்கு பொதுக் கூட்டத்தில் பேசிய பிறகு கழிவறைக்கு சென்ற ராகுல், தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் சென்றுள்ளார்.
கழிவறைக்கு வெளியே குஜராத்தி மொழியில் பெண்கள் கழிவறை என படத்துடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்து, அதை கவனிக்காமல் ராகுல் சென்றுள்ளார். அவருடன் வந்த எஸ்பிஜி கமாண்டோக்கள், ராகுல் பெண்கள் கழிவறைக்குள் சென்றதை கண்டு, வேகமாக ஓடி சென்று அவரிடம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தனது தவறை புரிந்து கொண்ட ராகுல், சில நொடிகளிலேயே வேகமாக வெளியே வந்துள்ளார். பெண்கள் பலரும் ராகுல், பெண்கள் கழிவறைக்குள் இருந்து வெளியே வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ராகுல், பெண்கள் கழிவறையில் இருந்து வேகமாக வெளியேறும் புகைப்படம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உடனடியாக வெளியிடப்பட்டு, வைரலாக்கப்பட்டு வருகிறது.