புன்னாலைக்கட்டுவனிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சிறுமி வவுனியாவில் மீட்கப்பட்டார்

யாழ்ப்பாணம் – புன்னாலைக் கட்டுவன் பகுதியை சேர்ந்த சிறு மியொருவர் கடத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் வைத்து மீட்கப்பட்டு ள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,கடந்த 05ம் திகதி 13 வயதுடைய சிறுமியை அவரது உறவினர் ஒருவர் அழைத்து சென்று வவுனியாவில் தங்கவைத்துள்ளார்.இந்தநிலையில் சிறுமியை காணாத பெற் றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே சிறுமி கடத்தப்பட்டமை தொடர்பிலான தகவல் பெற்றோருக்கு கிடைத் திருந்த நிலையில் அவர்கள் நேரடியாகச் சென்று சிறுமியை மீட்டதுடன் கடத்திய நபரை தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் அச் சிறுமியை மீட்டு வைத் தியசாலையில் அனுமதித்துள்ளனர். அத்து டன், சந்தேகநபரை மல்லாகம் நீதவானது வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 22-ம் திகதி வரை விளக்கமறிய லில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.