புனே தோல்வியின் ‘திடுக்’ உண்மைகள்

புனே டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தை முழுக்க முழுக்கசுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக மாற்றும்படி பி.சி.சி.ஐ., தரப்பில்கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டதாம். இது, இந்திய அணிக்கேபெரும் பாதிப்பாக அமைந்து விட்டது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணியை முழுமையாகவென்றதால், ஆஸ்திரேலியாவை எளிதாக சாய்த்து விடும் எனநம்பப்பட்டது.

கடைசியில் நிலைமை தலைகீழானது. புனே டெஸ்டில் இந்தியஅணி (105/1-0, 107/10), ஆஸ்திரேலியாவிடம் (260/10, 285/10) 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இப்போட்டியில், இந்திய அணியினர் ‘சொந்தக் காசில் சூன்யம்’ வைத்துக் கொண்டனர் என்பதுதற்போது தெரிய வந்துள்ளது. ஏனெனில், போட்டி துவங்கும் முன்பே ஆடுகளம் குறித்து பல்வேறுசர்ச்சை கிளம்பின.

ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் சில, அனுமதியில்லாமல் ஆடுகளத்தை போட்டோ எடுத்துவெளியிட்டன. இதில் பாளம் பாளமாக ஆடுகளத்தில் வெடிப்புகள் காணப்பட்டன.

இந்த ஆடுகளத்தில் முதல் பந்தில் இருந்தே ‘சுழலுக்கு’ கைகொடுக்கும் என்றார் ஆஸ்திரேலியஅணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதனால், கிடைத்த வரை லாபம் எனக் கருதி, ‘டாஸ்’ வென்றுபேட்டிங் தேர்வு செய்தார்.

‘சுழல்’ ஜாம்பவான் வார்ன் (ஆஸி.,) கூறுகையில்,‘ ஆடுகளத்தை பார்த்தால் எட்டு நாள்விளையாடியதைப் போல உள்ளது,’ என்றார். இதேபோல, இந்திய அணி முன்னாள் கேப்டன்கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர் உள்ளிட்டோரும் ஆடுகளம் உலர்ந்து இருந்ததை பார்த்து ஆச்சர்யம்தெரிவித்தனர்.

இதற்கு முழுக்காரணம் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) நிர்வாகத்தில் உள்ள மூத்தஉறுப்பினர் தான் என தெரியவந்துள்ளது. அதாவது புனே ஆடுகளம் வழக்கமாக வேகத்துக்குசாதகமானது. அதேநேரம், இங்கு நடக்கும் போட்டிகளில் எப்படியும் 4 நாட்களில் முடிவு கிடைத்துவிடும்.

கடந்த ஆண்டு நடந்த ரஞ்சி டிராபி பைனலில் மும்பை (371/10) அணியிடம், சவுராஷ்டிரா (235/10, 115/10), இன்னிங்ஸ், 21 ரன்னில் தோற்றது. இதில் விளையாடிய புஜாரா (சவுராஷ்டிரா), 4, 27 ரன்கள்தான் எடுத்தார். மொத்தம் 5 ஓவர்கள் தான் சுழற்பந்துவீச்சு பயன்படுத்தப்பட்டன.

தற்போது இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், ஹேசல்வுட் போன்ற ‘வேகங்கள்’இருப்பதால், ஆடுகளத்தை சுழலுக்கு சாதகமாக  மாற்றுமாறு மூத்த உறுப்பினர்தெரிவித்துள்ளார். இதை ஏற்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) மறுத்தது.

பின், புனே ஆடுகளத்தை பாராமரித்த பாண்டுரங் சல்கான்கரிடம் தெரிவிக்க, அவர் மறுத்துவிட்டாராம். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஆடுகள கமிட்டி தலைவர் தல்ஜித் சிங்கும்மிகவும் தயங்கியுள்ளார்.

பின் நேரடியாக தலையிட்ட அந்த மூத்த நிர்வாகி (தற்போது பதவியில் இல்லை), மைதானபாராமரிப்பாளர்களிடம் பேச, ஆடுகளத்தில் இருந்த புற்கள் பெரும்பாலும் அகற்றப்பட்டன. அதாவது ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.

போட்டி துவங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே தண்ணீரை குறைவாக விடும்படியும் ‘அட்வைஸ்’ செய்துள்ளார். தவிர, 2 மி.மீ., உயரத்துக்கு மட்டும் தான் புற்கள் இருக்க வேண்டும்என, கண்டிப்பாக தெரிவித்து விட்டார்.

இது மிகவும் ஆபத்தானது என, எம்.சி.ஏ., எவ்வளவோ முறை எடுத்துக் கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.

இதுகுறித்து ஆடுகள பாராமரிப்பாளர்  பாண்டுரங் சல்கான்கர் கூறியது:

ஆடுகளத்தின் தன்மையை மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பி.சி.சி.ஐ.,யிடம்  எச்சரித்தேன். ஆடுகள கமிட்டி தலைவர் தல்ஜித் சிங் உள்ளிட்டோர், சர்வதேச போட்டிகளுக்கானஆடுகளங்கள் அமைக்க வெளிநாடு சென்று விட்டனர்.

இதனால், எனக்கு கொடுக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றுவது தான் எனது வேலை. வேறுஎதுவும் செய்ய முடியவில்லை.

இந்த உத்தரவு அணி நிர்வாகத்தில் இருந்து வந்ததா, வேறு எங்கிருந்தும் வந்ததா என்பது குறித்துஎனக்குத் தெரியாது. அவர்களின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. கடைசியில் புனேயில்நடந்த முதல் போட்டி சோகமாக முடிந்தது பெரும் ஏமாற்றம் தான்.

இவ்வாறு பாண்டுரங் சல்கான்கர் கூறினார்.

குறை கூற விரும்பவில்லை

இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘‘ புனே டெஸ்டில் என்ன நடந்தது, என்ன தவறுகள்செய்தோம் என எங்களுக்கு நன்கு தெரியும். இதற்கு முன் விளையாடிய ஆடுகளங்களுக்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக நினைக்கவில்லை. நாங்கள் சரியாகவிளையாடவில்லை, அவ்வளவு தான். மற்றபடி ஆடுகளம் குறித்தும், இதில் என்ன நடந்தது என்றவிஷயங்கள் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. யாரையும் குறை கூற விரும்பவில்லை,’’ என்றார்.

புனேயில் இதற்கு முன்…

புனேயில் 19 முதல் தர போட்டிகள் நடந்தன. இதில் ‘வேகத்துக்கு’ 401 விக்கெட்டுகள் சரிந்தன. வேகப்பந்துவீச்சாளர்கள் இங்கு 10 முறை 5 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளைவீழ்த்தியுள்ளனர். அதேநேரம், சுழலில் மொத்தம் 90 விக்கெட்டுகள் தான் வீழ்ந்தன.

* முடிவு கிடைத்த 9 போட்டிகளில் சுழலை (28 விக்.,) ‘வேகத்தில்’ (250 விக்.,) தான் அதிகவிக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இதுபோன்ற காரணங்களால் தான் ஆடுகளம் மாற்றப்பட்டதாகதெரிகிறது.

‘பெரிய’ பவுலரா

புனே டெஸ்டில் 12 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஓ கீபே அச்சுறுத்தலான ‘சுழல்’ பவுலர் அல்ல. இத்தொடருக்கு முன் மொத்தம் 4 டெஸ்டில் 14 விக்கெட்டுகள் தான்வீழ்த்தியிருந்தார். ஆனால், தெருவில் விளையாடப்படுவது போன்ற  மோசமான புனே ஆடுகளம்இவருக்கு கைகொடுத்தது. மிகவும் தந்திரமாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்தார்.  அஷ்வின், ஜடேஜா உள்ளிட்டோர் பாரம்பரிய முறைப்படி பந்து வீசியதால், எதிர்பார்த்த அளவுக்கு சாதிக்கமுடியவில்லை.