- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

புதுமுக இயக்குநர் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா
புதுமுக இயக்குநர் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது
ஷங்கர் – ரஜினி இணையும் ‘2.0’ மற்றும் விஜய் இயக்கத்தில் ‘கரு’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்களிடம் கதைக் கேட்டு வந்தார்கள்.
தற்போது புதுமுக இயக்குநர் திலீப்குமார் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்கள். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இக்கதை முழுக்க நாயகியை மையமாக கொண்ட கதையாகும். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘கோ கோ’ என தலைப்பிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள்.