- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

பீஹார் தேர்தலுக்கு பின் தி.மு.க காங்கிரசுக்கு கொடுக்கும் சீட்டை குறைக்க முடிவு !!
பீஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளதால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.
பீஹார் சட்டசபை தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 42 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம், 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 19 தொகுதகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 25 சதவீத வெற்றியை கூட, காங்கிரஸ் தாண்டாத காரணத்தால், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியால், ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதே நிலை, தமிழகத்திலும் உருவானால், மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் தான் இருக்க வேண்டும் என்ற அச்சம், தி.மு.க., மேலிடத்திற்கு எழுந்துள்ளது.
அதாவது, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., 173 தொகுதிகளில் போட்டியிட்டு, 89 தொகுதிகளில் வெற்றி பெற்று, 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியது.
ஆனால், காங்கிரஸ், 41 தொகுதிகளில் போட்டியிட்டு, எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்று, 25 சதவீதத்திற்கும் குறைவான வெற்றியை தான் கைப்பற்ற முடிந்தது. காங்., கோஷ்டித் தலைவர்கள், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு, ‘சீட்’ வாங்கி தரும்போது, அவர்கள் தகுதி உள்ளவரா, வெற்றி பெறக் கூடியவரா என பார்க்காமல், அவர்களிடம் ஆதாயம் பெறுவதை மட்டும் கணக்கு பார்க்கின்றனர். இதனால், தகுதி இல்லாத வேட்பாளர்கள், தோல்வி பெறுகின்றனர்.
இதனால், தி.மு.க., ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், 40 தொகுதிகளை எதிர்பார்க்கிறது.
பீஹார் தேர்தல் முடிவுக்குப் பின், தமிழக காங்கிரசுக்கு, 20 தொகுதிகள் ஒதுக்கினால் போதும் என, தி.மு.க., மேலிடம் கருதுகிறது.
அதிக தொகுதிகள் கேட்டு, காங்கிரஸ் முரண்டு பிடித்தால், அக்கட்சியுடன் கூட்டணி தொடருவது குறித்து தி.மு.க., பரிசீலனை செய்யவும் வாய்ப்பு உள்ளது.
தேர்தல் வியூக பணிகளை கவனிக்கிற, ‘ஐபேக்’ நிறுவனம் அளித்த அறிக்கை அடிப்படையில், காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டும் ஒதுக்க, தி.மு.க., திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.