- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சுஷ்மிதா சென் , கிம் கர்தாஷியனுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்
பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சுஷ்மிதா சென் தனது புகைப்படத்தை வெளியிட்டவுடன் கிம் கர்தாஷியனுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சனம் செய்து உள்ளனர்.
சுஷ்மிதா சென் 1994ல் பெமினா மிஸ்.இந்தியா டைட்டில் வென்றார். இரண்டாம் இடத்தில் வந்தார் ஐஸ்வர்யா ராய். அதே வருடத்தில் பிரபஞ்ச அழகி பட்டத்தையும் சுஷ்மிதா வெல்ல, ஏகப்பட்ட பாராட்டு. சுஷ்மிதா சென் 18 வயதிலேயே பிரபஞ்ச அழகி பட்டம் வென்றவர். காரணம் இந்தப் படத்தை வென்ற முதல் இந்திய பெண் இவர்தான். தமிழில் ரட்சகன் படத்தில் கதாநாயகியாக நடித்துவர் சுஷ்மிதாசென். முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இவருக்கு 42 வயது ஆகிறது. 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்.
41 வயதிலும் இளமைத் தோற்றத்துக்குச் சொந்தக்காரர் சுஷ்மிதா சென். ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்து சிக்கென்று வைத்துள்ளார்.
சமீபத்தில், சுஸ்மிதா ஜிம்மில் இருந்து தன்னை ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். அதில் தனது முதுகு பகுதியை காட்டி இருந்தார். “பெரிய முடிவுகளைக் காண சிறிய (தசைக் குழுக்கள்) கவனம் செலுத்த வேண்டும். என கூறி இருந்தார்.
இந்த நிலையில் சுஷ்மிதா சென் இளமையாக காட்சியளிக்க வெளிநாட்டுக்கு சென்று முகத்துக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு பிறகு உள்ள தனது முகத்தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். இதற்கு பல்வேறு ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். சுஷ்மிதா சென், கிம் கர்தாஷியனுடன் ஒப்பிட்டு உள்ளனர்.