பிறந்த நாள் விழாவை ரசிகர்கள் தவிர்க்க கமல் வேண்டுகோள்

முதல்வர் உடல்நிலைக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,தன் பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கமல் இன்று ட்விட்டரில் கூறுகையில்,”நற்பணி இயக்கத் தோழர்களுக்கு கோரிக்கை. தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க,என் பிறந்தநாள் விழாக்களைத் கண்டிப்பாய் தவிர்க்க வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கமல் தன் பிறந்த நாளான நவம்பர் மாதம் 7-ம் தேதி அன்று நற்பணி இயக்கத் தோழர்கள் எந்த விழாவும் கொண்டாட வேண்டாம் என்று கூறியுள்ளார்.