- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

பிரேத பரிசோதனையில் தகவல் – ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா தொற்று
அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபொலிசில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கரை, டெரிக் சாவின் என்ற போலீஸ்காரர் , சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினார். அப்போது, பிளாய்டை தரையில் தள்ளி, அவரின் கழுத்தில், தன் கால் முட்டியால் அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத் திணறி, பிளாய்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டும், கறுப்பின மக்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்தும் அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஹென்னெபின் கவுண்டி மருத்துவ பரிசோதனை அலுவலகம், ஜார்ஜ் பிளாய்டின் 20 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையை, குடும்ப உறுப்பினர்களின் அனுமதியுடன் வெளியிட்டுள்ளது. அதில் பிளாய்டு கழுத்தில் காலை வைத்து அழுத்திய போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய மரணம் கொலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கடந்த ஏப்.3ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு அறிகுறி எதுவுமின்றி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பிளாய்டின் நுரையீரல் ஆரோக்கியமாக இருந்தது . ஆனால் இதயத்தில் சில தமனிகள் சுருங்கி போயிருந்தன’ என தலைமை மருத்துவ பரிசோதகரான ஆண்ட்ரூ பேக்கர் குறிப்பிட்டார். முந்தைய அறிக்கையில், பெண்டானில் போதைப்பொருள் மற்றும் மெத்தாம்பேட்டமைன் பயன்பாட்டை குறிப்பிடத்தக்க நிலையாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது மரணத்திற்கான காரணம் இல்லையென கூறப்பட்டிருந்தது.
பெண்டானில் நச்சுத்தன்மையின் அறிகுறிகளில் கடுமையான தீவிர மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு அடங்கும் என்று முழு அறிக்கையின் அடிக்குறிப்புகள் குறிப்பிடப்பட்டிருந்தது.
மினசோட்டா அட்டர்னி ஜெனரல் கீத் எலிசன், புதன்கிழமை டெரிக் சாவின் மீதான குற்றச்சாட்டுகளை கொலை குற்றமாக உயர்த்தியதோடு, மேலும் சம்பவ இடத்தில் இருந்த 3 போலீசாரும் அதற்கு உடந்தையாக இருந்ததாக சேர்த்தார்.
முன்னதாக வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் சாவினுக்கு எதிராக புகாரில் கூறப்பட்டிருந்த மூச்சுத்திணறலை நிராகரிப்பதாக பிளாய்டு குடும்ப வழக்கறிஞர் பென் கிரம்ப் அறிவித்தார். பிளாய்டு குடும்பத்தால் நியமிக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் , அவர் கழுத்து மற்றும் முதுகில் அழுத்தியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததாக முடிவுக்கு வந்தனர்.