பிரித்தானியாவில் மீண்டும் அமுலுக்கு வரும் நீல வண்ண கடவுச்சீட்டு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியதை அடுத்து மீண்டும் நீல வண்ண கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

பிரித்தானியாவில் புதிய வடிவமைப்புடன் மேலதிக பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் நீல வண்ண கடவுச்சீட்டுகளை வரும் 2019 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு கொண்டுவர உள்விவகாரத்துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.

இதுவரை பயன்பாட்டில் இருக்கும் Burgundy நிற கடவுச்சீட்டை உரிய அலுவகங்களில் ஒப்படைத்து புதிய நீல வண்ண கடவுச்சீட்டை குடிமக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள Burgundy நிற கடவுச்சீட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய சின்னத்தை மாற்ற வலியுறுத்தி ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த நீல வண்ன கடவுச்சீட்டு தயாரிப்பு செலவினங்களுக்காக 500 மில்லியன் பவுண்டு ஒதுக்கப்பட்டு, புது வடிவமைப்பிலும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடனும் வரும் 2019 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வர உள்ளது.

முன்னதாக 1988 ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்கள் நீல வண்ண கடவுச்சீட்டையே பயன்படுத்தி வந்தனர்.

பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் சின்னங்களுடன் கூடிய Burgundy வண்ண கடவுச்சீட்டு அமுலுக்கு வந்தது. தற்போது மீண்டும் நீல வண்ண கடவுச்சீட்டு அமுலுக்கு வருவதை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.