பிரிட்டனில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் 10 சதவீதத்தினரது தகவல்கள் இல்லை

பிரிட்டனில் தற்போது கொரோனா குறித்த ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டன் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்கள் 600 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாமென கூறப்படுகிறது. இன்னும் உறுதி செய்யப்படாத இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டனில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் 10 சதவீதத்தினரது தகவல்கள் இல்லை. இவர்கள் என்.ஹெச்.எஸ்-ல் சிகிச்சை பெறவில்லை என்பதால் இவர்கள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. ஆராய்ந்து பார்த்ததில் இவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களில் தங்கியுள்ள வயோதிகர்கள் எனத் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கடந்த ஏப்.,3ம் தேதி வரை 4,100 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன.217 பேர் மட்டுமே இதுவரை முதியோர் இல்லங்களில் இருந்து மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது