பிரதமர் மோடி குறித்தான விமர்சனம் காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கோரினார்

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் தீவிரமாக சென்ற நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச நினைவு மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அப்போது காங்கிரஸ் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தார். டாக்டர் அம்பேத்கார் பெயரில் வாக்கு சேகரிக்கும் கட்சிகள், இந்த நாட்டை கட்டமைப்பதில் அவருடைய பங்களிப்பை அழிக்க முயற்சி செய்கின்றன என்றார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மணிசங்கர் அய்யர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதுதொடர்பாக குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி குஜராத் மக்கள் மணிசங்கர் அய்யர் பேச்சுக்கு குஜராத் மக்கள் வாக்குகளால் பதிலடி கொடுப்பார்கள் என்றார். இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியிடம் மணிசங்கர் அய்யரை மன்னிப்பு கேட்க கோரினார்.

மணிசங்கர் அய்யர் பேசுகையில், டாக்டர் அம்பேத்கார் சர்வதேச நினைவு மைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை விமர்சிப்பது ஏன்? எங்களுடைய தலைவர்களுக்கு எதிராக பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். நான் காங்கிரஸ் கட்சியில் எந்தஒரு பதவியிலும் நான் கிடையாது, எனவே என்னால் பிரதமர் மோடிக்கு அவருடைய பேச்சுக்கு அவர் பயன்படுத்தும் வார்த்தையின் மூலம் பதிலடி கொடுத்தேன். முதலில் என்னுடைய தாய் மொழி இந்தி கிடையாது, இந்தியில் பேசிய போது ஆங்கிலத்தை மனதில் வைத்து பேசிவிட்டேன். நான் பயன்படுத்திய வார்த்தைக்கு வேறு அர்த்தங்கள் இருப்பின் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

மேலும் அவர் பேசுகையில் நான் பயன்படுத்திய வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளது, நான் பிரதமர் மோடியின் ஜாதியை குறிப்பிட்டு பேசவில்லை. நான் பயன்படுத்திய வார்த்தைக்கு ஜாதி அடிப்படையிலான அர்த்தம் இருப்பின் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரு காங்கிரஸ் கட்சியின் தொண்டர், கட்சியில் எந்த பதவியிலும் கிடையாது. குஜராத் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொள்ளவும் என்னை யாரும் கேட்டுக்கொள்ளவில்லை, இந்நிலையில் என்னுடைய கருத்து தொடர்பாக இவ்வளவு அமளி ஏன்? என கேள்வியை எழுப்பி உள்ளார்.